ஒலிம்பிக் நிகழ்ச்சியில் உதயநிதியை ரஜினிகாந்த் கண்டுகொள்ளாத வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பராக கொடிகட்டி பறப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தமிழகத்தில் நடந்து வரும் 44வது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டை காண சென்று இருக்கிறார்.

கடந்த ஒரு வரமாக ஒலிம்பியாட் விளையாட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது/. இந்த விளையாட்டை காண சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க உதயநிதி ஸ்டாலின் வந்து இருக்கிறார். அவர் ரஜினிகாந்துக்கு பின்னாடி இருந்த வைரமுத்துவிற்கு வாழ்த்து கூறியும், ரஜினிகாந்த் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் இருந்தார்.

Advertisement

ஆனால், ரஜினிகாந்த் உதயநிதியை கண்டுகொள்ளவே இல்லை. இந்த வீடியோவை நெட்டிசன்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அதில் சிலர், எழுந்து நின்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அவர் என்ன கோமாளிகாசானா? என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் உதயநிதிக்கும் ரஜினிகாந்த்துக்கும் இடையே பிரச்சினை தான் என்று குறித்து பதிவிட்டு வருகிறார்கள். 2019 டிசம்பரில் தி.மு.க. சிஏஏவுக்கு எதிராக ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்தப் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவுசெய்திருந்த உதயநிதி ஸ்டாலின், “உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்” என்று பதிவிட்டிருந்தார். இது ரஜினிகாந்தைத்தான் குறிப்பதாக அந்தத் தருணத்திலேயே ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

Advertisement

இப்போது, ஒட்டுமொத்த தமிழகத்தையும் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் புரட்டிப் போட்டு இருந்தது. இதற்கு பலரும் பல விதமான கருத்து தெரிவித்து இருந்தார்கள். இந்தக் கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் ஊடுருவல் என்று கூறி ரஜினியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்கள். அதற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின், ‘நான் தான் டா ரஜினிகாந்த்’ என்று ஹாஸ்டேக் போட்டு ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக கூறி இருக்கிறார்.

Advertisement

இதை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் ‘அன்றே கணித்த தலைவர்’ என்று கூறி ரஜினி பேட்டி அளித்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்கள். அதோடு கள்ளக்குறிச்சி கலவரம் வெடித்தபோது உதயநிதி ஸ்டாலின் அந்த இடத்திற்குச் செல்லாததைக் குறிப்பிட்டும், முன்பு ரஜினியை விமர்சித்ததைக் குறிப்பிட்டும் ரஜினி ரசிகர்கள் “நான்தான்பா உதவாக்கரைஉதய்” என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து இருந்தார்கள்.

Advertisement