லோகேஷும் இல்லை சுந்தர் சியும் இல்லை, ரஜினி - கமல் படத்தை இயக்கும் இயக்குனர் இவர் தான்

By subhashini · 31/1/2026

தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக திகழ்பவர்கள் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இருவருக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் என மக்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரையும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது கே பாலசந்தர் தான்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரையும் வைத்து கே. பாலசந்தர் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மேலும், சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

கமல்-ரஜினி குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் கமல்-ரஜினி சேர்ந்து நடிக்கும் தகவல் சமீபத்தில் வெளியானது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கமல்- ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். இதை அடுத்து இந்த தலைவர் 174 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் இருந்திருக்கிறது. அந்த வகையில் முதலில் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் பெயர் வந்தது. உடனே பிரதீப் ரங்கநாதன், தான் அந்த படத்தை இயக்கவில்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டார்.

தலைவர் 174:

பின் லோகேஷ் கனகராஜ் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின் அவரும் படத்தை இயக்கவில்லை என்று கூறப்பட்டது. பின் நெல்சன் கதை ரஜினிக்கு பிடித்திருந்தால் கிரீன் சிக்னல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி- கமல் படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ரஜினிகாந்த் உடைய ஜெயிலர் படத்தை நெல்சன் தான் இயக்கி இருந்தார். தற்போது ரஜினிகாந்த் உடைய ஜெயிலர் 2 படத்தையும் நெல்சன் தான் இயக்கி வருகிறார்.

மாஸ் அப்டேட்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த பிரம்மாண்ட கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஒரு பிரத்யோக ப்ரோமோ வீடியோவை வெளியிட பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு பிப்ரவரி 7 ஆம் தேதி பிரசாத் லேபில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவை பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் தான் எடுக்க இருக்கிறார். இவரே இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். அதோட கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' படத்தினுடைய வேலைகள் முடிந்த பிறகு தான் நெல்சன்-கமல்- ரஜினி படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full