உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா கவலபடாத - உயிருக்கு போராடும் ரசிகைக்காக ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ.

By Arun · 18/12/2021

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ரசிகை ஒருவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆறுதல் கூறி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் திருவிழா போன்று அலைமோதும். அந்த அளவிற்கு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மாபெரும் தோல்விப்படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலை வாரி குவித்து இருந்தது.

பெங்களூர் சிறுமி :

இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகைகளில் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெங்களூரை சேர்ந்த பெண்.

உயிருக்கு போராடும் ரசிகை :

https://www.youtube.com/watch?v=lanUgENLGLk

இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த பொண்ணுக்கு வீடியோ கால் மூலம் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஒன்றும் பயப்பட வேண்டாம். ஆண்டவன் இருக்கிறான்.

ரசிகைக்கு ஆறுதல் :

கண்டிப்பாக நீங்கள் குணமடைந்து வீடு திரும்புவீர்கள். கொரோனா காரணமாகத் தான் என்னால் நேரில் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. நீங்கள் நலம் பெற நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. இப்படியே சிரித்து கொண்டு இருக்க வேண்டும்.

நல்லதே நடக்கும் :

பயப்படாதீர்கள், நல்லதே நடக்கும் என்று அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். இப்படி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வரும் ரசிகைக்கு ஆறுதல் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full