என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது - பிரபலத்திற்கு ரஜினி எழுதிய கடிதம்.

By Siva · 3/4/2023

என்னுடைய இந்த கனவு நிறைவேறவில்லை என்று வருத்தத்துடன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அம்பானி வீட்டு கட்டிடம்:

இதற்கான அறிவிப்புகள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அம்பானிக்கு நடிகர் ரஜினி எழுதி இருக்கும் கடிதம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மும்பைக்கு சென்றிருக்கிறார். அங்கு அம்பானியின் மனைவி நீதா அம்பானி அவர்கள் மும்பையில் கலாச்சாரம் மைய கட்டிடம் ஒன்றை கட்டியிருக்கிறார். இதை தான் நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் அவருடைய இளைய மகள் சௌந்தர்யாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சி குறித்த விவரம்:

மேலும், இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழாவிற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த திறப்பு விழாவில் பல கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தது. மேலும், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பரதநாட்டியம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முகேஷ் அம்பானிக்கு கடிதம் ஒன்றியம் எழுதி இருக்கிறார்.

ரஜினி எழுதிய கடிதம்:

அதில் அவர், கலாச்சாரம் மையத்தின் பிரம்மாண்ட அலங்காரம், சிறப்பான கட்டிட கலையினால் நான் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். இந்திய கலைகளை மேம்படுத்துவதற்காக மும்பையில் பிராட்வே பாணி கலாச்சாரம் மையத்தை திறந்ததில் மகிழ்ச்சி. இந்த அரங்கத்தின் அற்புதமான வசதியை பார்த்த பிறகு இந்த என்எம்ஏசிசி திரை அரங்கில் நடிக்க விரும்புகிறேன். இந்த அரங்கில் ஒரு முறையாவது நடித்து விட வேண்டும் என்பது தான் இப்போது என்னுடைய மிகப்பெரிய கனவாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full