பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் இன்று (ஏப்ரல் 30) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .கே வி ஆனந்த் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று 14 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களாக முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. தொடர்ந்து ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த், பின்னர் இயக்குனராக களமிறங்கினார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் 2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் பிரித்திவிராஜ் கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் திரைப்படம் மூலம் தான்.

அதன் பின்னர் அயன் கோ மாற்றான் அனேகன் காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,

Advertisement

மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினியின் டிவீட்ற்கு கீழ் ரசிகர்கள் சிலர், கே வி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி தவறவிட்டுள்ள படம் பற்றி மேடையில் ரஜினி பேசிய வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் பேசியுள்ள ரஜினி, சஹானா சாங் செட் பண்ணி இருக்கும் போது அந்த லைட்டில் எப்படி கேமரா வைத்தார்கள் என்று பலரும் வியந்தார்கள். அவர் ஒரு இயக்குனர் ஆவார் என்று தெரியும். அயன் படத்தை பார்த்துவிட்டு அயன் படத்தை பார்த்த பின்னர் அவருடன் வேலை செய்ய வேண்டும் என்று அவரிடம் கதை கேட்டேன். ஆனால், அந்த படம் சில காரணத்தால் என்னால் பண்ண முடியவில்லை. அதற்கு நான் தான் மிஸ் பன்றேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement