37 வருடங்களுக்கு பின் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் ரஜினி படம் - என்ன தெரியுமா?

By subhashini · 23/1/2026

தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை உலகில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் ரஜினி நடித்த படம் கூலி. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பான் இந்தியா அளவில் வெளியாகி வெற்றியை கண்டது. அதோடு மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனையும் செய்து இருந்தது.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ரஜினி உடைய இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது. ஒன்று ஜெயிலர் 2, இன்னொன்று ஹிந்தி படம். அது என்னவென்றால், பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் ரீனா ராய். இவருடைய சகோதரர் தயாரிப்பாளர் ராஜா ராய்.

ரஜினி படங்கள்:

இவருடைய இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா மற்றும் மறைந்த நடிகர்களான ஜகதீப், அம்ரிஷ் பூரி என பெரிய நட்சத்திரம் பட்டாளம் நடித்த இந்தி படம் தான் 'ஹம் மே ஷாஹென்ஷா கோன்'. இந்த படம் 1989 இல் படமாக்கப்பட்டது. ஆனால், இந்த படம் இத்தனை வருடங்களாக வெளியாகவில்லை. கிட்டத்தட்ட 37 வருடங்களாக இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இதற்கு காரணம், படப்பிடிப்பு முடிந்ததும் பல சோகமான சம்பவங்கள் நடந்தது. 89இல் படப்பிடிப்பு முடிந்த உடனே ராஜா ராயின் மகன் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். பின் படத்தின் இயக்குனர் இறந்தார். இப்படி தனிப்பட்ட இழப்புகளால் தான் இந்த படம் 37 ஆண்டுகளாக வெளியாகாமல் முடக்கில் கிடந்தது.

இரண்டு படங்கள் அப்டேட்:

இதற்கிடையே தான் ராஜா ராய் மீண்டும் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இது தொடர்பாக ராஜா ராய் அளித்த பேட்டியில், இந்த படம் வெளியாகுவது எனக்கு ஒரு குழந்தை பிறப்பது போன்ற உணர்வைத் தருகிறது. ஏஐ தொழத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழைய படத்தை இப்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாற்றி இருக்கிறோம். இதன் மூலம் நடிகர்களின் அசல் நடிப்பை மாறாமல் ஒரு நவீன டிஜிட்டல் அனுபவத்தை தர முடியும்.

படம் ரிலீஸ் பேட்டி:

இந்த படத்திற்காக வாங்க வேண்டிய அனுமதி எல்லாம் 90களில் வாங்கி விடப்பட்டது. இந்த படத்தின் விளம்பரம் தொடர்பாக ரஜினிகாந்த் இடம் விரைவில் பேச இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். 37 வருடங்களுக்குப் பிறகு அதுவும் ரஜினியின் உடைய இளமைக்கால நடிப்பை திரையில் பார்க்க இருப்பது ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பொதுவாகவே ரஜினி நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம் தான் வெளியாகும். ஆனால் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகுவதால் ரசிகர்கள் கொண்டாட காத்துக் கொண்டிருக்கிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full