அரசியல் என்ட்ரி, உடல் நல குறைபாடு, பட தோல்வி, மகளின் விவாகரத்து - தொடர் சோதனைகளால் ரஜினி எடுத்துள்ள முடிவு.

By subhashini · 6/2/2022

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் திருவிழா போன்று அலைமோதும். அந்த அளவிற்கு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்து ரஜினிகாந்த் கூறி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாத்த படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இதற்காக பல இயக்குனர்கள் ரஜினிகாந்திடம் கதைகளை கூறி இருக்கிறார்கள்.

ரஜினியின் அடுத்த படம்:

ஆனால், எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்பதை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதமாகவே தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் ரஜினிகாந்த்துக்கு பேரிடியாக விழுந்தது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே ஹாலிவுட், பாலிவுட்டிலும் தனுஷ் கால்த் தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா திருமணம் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

தனுஷ் - ஐஸ்வர்யா குடும்பம்:

இப்படி ஒரு நிலையில் 18 வருட திருமண வாழ்வில் இருந்து தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது? என்று தெரியாமல் பலரும் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம்:

இதனால் ரஜினிகாந்த் அவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இவர்களின் விவாகரத்து அறிவிப்பு ரஜினிக்கு முன்பே தெரிந்திருந்தாலும் இதுதொடர்பாக பலரும் ரஜினியிடம் கேட்டு பேசுகிறார்கள். இதனால் ரஜினிகாந்த் அதிக கவலையில் இருக்கிறார்கள். இதற்காக தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முழுமையாக தனிமையிலேயே தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார் ரஜினி. அதுமட்டுமில்லாமல் தனக்கு மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே ரஜினி பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் ரஜினியிடம் கதைகளை கூறி இருந்த இயக்குநர்கள் தங்களுடைய கதைகளை புதிதாக தயார் செய்து அதைப்பற்றி கூறுவதற்காக ரஜினிகாந்தை தொடர்பு கொண்டுள்ளார்கள்.

அடுத்த படம் குறித்து ரஜினிகாந்த் கூறியிருப்பது:

அப்போது ரஜினிகாந்த் சார்பாக கூறியிருப்பது, இப்போதைக்கு நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. தற்போது நான் தனிமையில் இருக்க விரும்புகிறேன். அதோடு சில காலம் கழித்து நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம். கொஞ்சம் என்னை தனிமையில் விடுங்கள் என்று ரஜினி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி ரஜினிகாந்த் தன்னுடைய மூத்த மகளின் விவாகரத்து பிரிவினால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் இவருடைய படத்திற்கான வேலைகள் எல்லாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரஜினிக்கு ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full