50 வருட கால நண்பர், என் நடிப்பு அவருக்கு பிடிக்காது - எமோஷனலாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்

பாரதிராஜா மறைவுக்கு ரஜினி இரங்கல்

By subhashini · 10/6/2026

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வந்தார்.

பாரதிராஜா மறைவு:

இதனிடையே இவர் படத்தில் தன்னுடைய மகன் மனோஜை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் நடிகரும் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் காலமானார். இவருடைய இறப்பு பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்தது. தன்னுடைய மகனின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் மன வேதனையில் இருந்தார். அதற்கு பிறகு பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே இவர் ரொம்பவே அவஸ்தைப்பட்டு இருந்தார்.

ரஜினி இரங்கல்:

இப்படி இருக்கும் நிலையில் இன்று அதிகாலை பாரதிராஜா சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இவருடைய இறப்பு திரை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பின்

பேட்டியில், ரஜினி என்னுடைய 50 ஆண்டுகால நண்பர். அவருடைய திறமையை பற்றியும், சாதனையை பற்றியும் அனைவருக்குமே தெரியும். நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி அவர்களை வாழ வைத்தவர். பாரதிராஜா இயக்குனர்கள், நடிகர்கள் என யாருக்கு பிரச்சினை வந்தாலும் முதலாளாக வந்து குரல் கொடுப்பார்.

ரஜினி பேட்டி:

அவர்களுக்காக போராடியும் இருக்கிறார். இன்னும் பல ஆண்டுகளானாலும் அவருடைய படைப்புகள் நிலைத்து நிற்கும். தனிப்பட்ட முறையில் அவர் குழந்தை போல மனதுக்குள் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர். பிடித்தால் பிடிக்கும் என்பார் இல்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுவார். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் ரஜினி. உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால், உன்னுடைய நடிப்பு எனக்கு பிடிக்காது என்றெல்லாம் சொன்னார். அவருடன் இருந்தாலே கலகலப்பாக இருக்கும். அவரைப்போல வெளிப்படையாக யாரும் பேச மாட்டார்கள். திரைத்துறையில் அனைவரிடமும் அன்பாக இருந்தார். அவர் உயிருடன் இருக்கும் போதே நான் பார்க்க நினைத்தேன். விரைவில் குணமடைந்து விடுவார் அப்போது வந்து பாருங்கள் என்று சொன்னார்கள். கடைசி வரையில் அவரை பார்க்க முடியாமலே போனது. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full