அவரால தான் 12 வயசுல சென்னைக்கு ஓடி வந்தேன், இன்னிக்கி அவரே பாராட்டிய போது - மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர்.

By subhashini · 10/5/2024

மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படத்தில் ஒன்று மஞ்சுமெல் பாய்ஸ். இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள்.

அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பது படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

இந்த படம் மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சில தமிழ் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் விஜய் முத்து நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கித் தந்தது மஞ்சுமெல் பாய்ஸ் படம் தான். மேலும், இந்த படத்தை பார்த்து தமிழ் பிரபலங்கள் பலருமே பாராட்டிருந்தார்கள்.

நடிகர் விஜய் முத்து குறித்த தகவல்:

அந்த வகையில் ரஜினிகாந்த்தும் படத்தை பார்த்து படக்குழுவினரை அழைத்து பாராட்டி இருந்தார். தற்போது இந்த படத்தில் நடித்த விஜய் முத்துவையும் நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து பேட்டியில் நடிகர் விஜய் முத்து, மஞ்சு போல் பாய்ஸ் படம் எனக்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணனும், ராதாரவி அண்ணனும் படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டி இருந்தார்கள். இவர்கள் இரண்டு பேர் வாழ்க்கையில் பல நடிகர்களை பார்த்திருப்பார்கள். இருந்தும் அவர்கள் என்னை அழைத்து பாராட்டியது எனக்கு மிகப்பெரிய வரமாக நினைக்கிறேன்.

நடிகர் விஜய் முத்து பேட்டி:

இதைத் தாண்டி எனக்கு வேற என்ன விஷயம் சினிமாவில் கிடைத்திட முடியும். நானும் ரஜினி அண்ணனோடு சேர்ந்து 4 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், சின்ன சின்ன கதாபாத்திரம் தான். இருந்தாலும் அவரிடம் நான் நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறேன். அவரை அண்ணன்னு தான் உரிமையோடு கூப்பிடுவேன். அவரைப் பார்த்து தான் நான் என்னுடைய 12 வயதில் சினிமா கனவோடு சென்னைக்கு ஓடி வந்தேன். இதை பத்தி எல்லாம் நான் அவரிடம் பேசி இருக்கிறேன். நான் ரஜினி அண்ணனைப் பார்த்து வளர்ந்தவன். இப்போது அவரே என்னை கூப்பிட்டு பாராட்டிருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. அதோடு பட குழுவினரை அழைத்து பாராட்டி பேசும் போது ரஜினி அண்ணன் என்னை பற்றி சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

ரஜினி குறித்து சொன்னது:

இதை இயக்குனர் என்னிடம் சொல்லும்போது எனக்கு சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதற்கு பிறகு தான் நான் ரஜினி அண்ணனை போய் சந்தித்தேன். என்னை பார்த்ததுமே அவர் தம்பி என்று கூப்பிட்டு அரவணைத்துக் கொண்டார். அதேபோல் ராதாரவி அண்ணாவும் என்னுடைய கதாபாத்திரத்தை பார்த்து ரொம்பவே பாராட்டி இருந்தார். நான் ஒரு மூணு வருடம் ராதாரவி அண்ணன் வீட்டில் தான் வளர்ந்தேன். அவரிடம் சாதாரண ஆபீஸ் பாயாக தான் இருந்தேன். இந்த பெயரை நான் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். இப்போது நான் முத்தையா சார் இயக்கத்தில் உருவாகும் சுள்ளான் சேது என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் சில வாய்ப்புகளும் வந்திருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full