அன்று ரஜினியை ஜீரோ என்று விமர்சித்த ரோஜா, இன்று ஆந்திராவில் ரஜினி காட்டிய மாஸ்

By subhashini · 12/6/2024

விழாவில் சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் பாராட்டி பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மூத்த என்டிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் அவர்கள் சீனியர் என்டிஆருடன் நல்ல உறவில் இருந்தவர்.

அதேபோல் சந்திரபாபு நாயுடுவின் நல்ல நண்பராகவும் ரஜினிகாந்த் இருக்கிறார். மேலும், விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை வாழ்த்தி பாராட்டியிருக்கிறார். பின் அவர், எனக்கு சந்திரபாபு நாயுடு 30 ஆண்டு கால நண்பர். நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய தலைவர்களுக்கும் அவருடைய தொலைநோக்கு தெரியும். விஷன் 2020க்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளம் போடப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐடி வளர்ச்சி பற்றி சந்திரபாபு பேசியிருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளி பேசியிருந்தார்.

மூத்த என்டிஆர் நூற்றாண்டு விழா:

பின் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சந்திரபாபு நாயுடு நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். கடந்த மாதம் லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு தன்னை விமர்சித்து பேசியதாக சந்திரபாபு நாயுடு மீது ரோஜா குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பலர் ரோஜாவிற்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். ஆனால், ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக தான் நின்றிருந்தார். ரஜினிகாந்த்- ரோஜா இருவருமே இணைந்து படங்களில் பணியாற்றி இருந்தார்கள்.

ரஜினி-ரோஜா சர்ச்சை:

இருந்தாலுமே தனக்கு ரஜினி ஆதரவு கொடுக்காதது குறித்து ரோஜா கடுமையாக கண்டித்து இருந்தார். இதனால் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி ஜெயிக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால், பல போராட்டங்களுக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனை எதிர்த்து சந்திரபாபு நாயுடு போட்டியிட்டார். ஜெகன் மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

முதல்வரான சந்திரபாபு நாயுடு:

இதில் ஆந்திராவில் 175 சட்டத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றிருந்தது. பவன் கல்யாண் 21 இடங்களிலும், பாஜக எட்டு இடங்களிலும் வெற்றி பெற்று. மொத்தம் 164 இடங்களை தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியிருந்தது. ஜெகன்மோகன் ஒய் எஸ் ஆர் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஒருவழியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். இதற்கு பிரபலங்கள் பலருமே வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். மேலும், சந்திரபாபு பதவி ஏற்கும் விழாவில் ரஜினி உடன் சீரஞ்சிவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் உட்பட பலர் கலந்து இருந்தார்கள்.

ரஜினி திரைப்பயணம்:

கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை அடுத்து தற்போது ரஜினி அவர்கள் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து ரஜினிகாந்த் அவர்கள் 'கூலி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் இவர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full