நான் கன்னட பாடத்துல டாப், சண்டாளன் வேஷம் போட்டு விருது - பள்ளி அனுபவத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்

By subhashini · 19/1/2025

இந்திய சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80’s காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த ‘வேட்டையன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இதை அடுத்து தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முமரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இன்னும் சில படங்களில் ரஜினி கமிட்டாகி இருக்கிறார்.

ரஜினி பள்ளி பருவம்:

இந்நிலையில் தன்னுடைய பள்ளி நாட்களை நினைவு கூறும் வகையில் ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறார். இவர் பெங்களூரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஏபிஎஸ் பள்ளியில் தான் கன்னட மொழி பாடத்தை தேர்வு செய்து படித்தார். இந்தப் பள்ளியில் சிறப்பு முன்னாள் மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. இது தொடர்பாகத்தான் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

ரஜினி வெளியிட்ட வீடியோ:

அதில் அவர், நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், பேங்காக்கில் ஒரு பாங்காக்கில் ஷூட்டிங் இருப்பதால் என்னால் வர முடியவில்லை. ஏபிஎஸ் பள்ளியில் படித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். முதலில் நான் கவிப்பூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தான் படிக்க வந்தேன். அப்போது கன்னட மீடியத்தில் சேர்ந்தேன். அப்போது வகுப்பில் நான் தான் முதல் மாணவன், கிளாஸ் லீடர், எல்லா பாடங்களிலும் 98 மதிப்பெண்கள் தான் வாங்குவேன். நன்றாக படித்து வந்த என்னை என்னுடைய அண்ணன் தான் ஏபிஎஸ் பள்ளியில் ஆங்கில மீடியம் சேர்த்தார். முழுக்க முழுக்க கன்னடம் மீடியத்தில் படித்துவிட்டு ஆங்கில மீடியத்திற்கு மாற்றி இருந்ததால் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

பள்ளி அனுபவம்:

முதல் பெஞ்ச் மாணவனாக இருந்த நான் கடைசி பெஞ்சில் கடைசி பெஞ்ச் மாணவனாக மாறினேன். படிப்பில் என்னால் கவனமே செலுத்த முடியவில்லை. ரொம்ப மன அழுத்தமாக இருந்தது. பின் ஏபிஎஸ் பள்ளியின் உடைய அனைத்து ஆசிரியர்களுமே என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு எனக்கு தனி கவனம் செலுத்தி பாடம் சொல்லித் தந்தார்கள். எப்படியோ ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றேன். ஆனால், பத்தாவது பொதுத் தேர்வில் பெயில் ஆகிவிட்டேன். ஆசிரியர்கள் எனக்கு சிறப்பு கவனம் செலுத்தியும், டியூஷன் எடுத்து தான் நான் தேர்ச்சி பெற்றேன். இருந்தாலும் குறைவான மதிப்பெண் தான் வாங்கினேன். ஏபிஎஸ் கல்வி நிறுவனத்தின் கல்லூரியில் சேர்ந்தேன். பல காரணங்களால் கல்லூரியில் தொடர்ந்து என்னால் படிக்க முடியவில்லை.

சினிமா அனுபவம்:

என்னுடைய பள்ளி காலங்களில் நான் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டிருந்தேன். நான் பார்த்த படங்களை எல்லாம் என்னுடைய நண்பர்கள் முன்பு நடித்துக் காட்டுவேன். நான் இப்படி செய்வதை பார்த்து என்னுடைய ஆசிரியர்களும் பாராட்டி இருந்தார்கள். அவர்கள் நாடகங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தார்கள். ஆதி சங்கரர் சண்டாளர் நாடகத்தில் தான் நான் சண்டாளனாக நடித்தேன். எங்களுடைய நாடகமும் பரிசு பெற்றது. அதற்காக எனக்கு கேடயமும் கொடுத்தார்கள். அன்று எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அதற்குப்பின் நடிப்பதே என்னுடைய தொழிலாகிவிட்டது. முடிந்தவரை பல குழந்தைகளை மகிழ்விக்க முயற்சிக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரியினுடைய பெருமைதான். ஏபிஎஸ் பள்ளியின் நினைவுகள் எதையுமே என்னால் மறக்கவே முடியாது என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full