'சிவாஜி' படத்தில் ரஜினி தமிழ் நடிகர்களை போல ஆடுவார் ஞாபகம் இருக்கா - அதே தெலுங்கு ரீ-மேக்கில் யார் யார் மாதிரி ஆடி இருக்கார் பாருங்க.

By Rajkumar · 30/8/2020

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும்.

இந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துடன் 'சிவாஜி, எந்திரன், 2.0' என மூன்று மெகா ஹிட் படங்களுக்காக கூட்டணி அமைத்திருந்தார். இதில் 'சிவாஜி' திரைப்படம் தான் இவர்களது காம்போவில் வெளி வந்த முதல் திரைப்படம். இந்த படத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரேயா சரண் டூயட் பாடி ஆடியிருந்தார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன், பட்டிமன்றம் ராஜா, சண்முகராஜன், பிரமிட் நடராஜன், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், கொச்சின் கனீஃபா ஆகியோர் நடித்திருந்தனர். 'AVM புரொடக்ஷன்ஸ்' எனும் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு 'இசை புயல்' ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

https://www.facebook.com/109832200679977/videos/377536089830639

ஜினிக்கு தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ரசிகர் பட்டாளமும், மார்க்கெட்டும் உள்ளதால் இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்தது. சிவாஜி படத்தில் 'அதிரடிக்காரன் ' பாடலுக்கு முன்பாக ரஜினி மற்றும் ஸ்ரேயா, எம் ஜி ஆர் , சிவாஜி, கமல் போல ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடி அசத்தி இருப்பார்கள். ஆனால், தெலுங்கில் பாலய்யா, சிரஞ்சீவி போன்றவர்களின் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full