அப்போதே 51 லட்சம் கொடுத்துள்ள ரஜினி - வறுமையில் வாடும் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு தற்போது கொடுத்துள்ள வாக்கு.

By Manikandan · 9/3/2023

20களின் தொடக்க காலத்தில் பிதாமகன், சேது, பாபா போன்ற வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ஒரு காலத்தில் பிரபல தயாரிப்பாளர்க்காக இருந்த இவர் தற்போது நீரிழிவு நோய்க்கு உள்ளகி பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல், பணமும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இவர் ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒருவராக இருந்தார். ஆனால் தற்போது நீரிழிவு நோயால் காலில் ஆறாத புண் ஏற்பட்டு நடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை ஏ.எம் இரத்தினத்திடம் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி பின்னர் "எவர் கீரின் இன்டர்நேஷனல்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பாபா படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். தற்போது இவர் பணம் இல்லாத காரணத்தினால் விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் மிகவும் செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன் செய்த உதவி :

இந்நிலையில் தான் சமீபத்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் தற்போது எழுந்து அமரும் அளவிற்கு இவரின் உடல் தேரி விட்டது. இருந்தாலும் இவரது காலில் நீரிழிவு நோயின் காரணமாக புண் ஆறாமல் இருந்து வருகிறது. இதனால் தொடர்ந்து இவரது உடல் மெலிந்து வருகிறது. மேலும் இதனை சரி செய்வதர்க்கு கூட பணம் இல்லாமல் இருந்து வந்துள்ளார் வி.ஏ.துரை. அப்படியொரு நிலையில் தான் இவரின் நிலைமை பற்றி பிரபல ஊடகம் ஓன்று வீடியோ வெளியிட்டிருந்தது.

சினிமாத்துறையினர் உதவி :

இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு நடிகர் சூர்யா 2 லட்சம் பண உதவி செய்துள்ளார். அதே போன்று நடிகர் கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் உதவி செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலான நிலையில் நடிகர்கள் முதல் தயாரிப்பாளர் வரையில் பலரும் இவருக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் உதவி செய்வதாக கூறிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே நேரடியாக தொலை பேசியின் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பேனில் பேசிய ரஜினிகாந்த் :

மேலும் ரஜினிகாந்த் எந்த விஷியத்தை பற்றியும் கவலை படவேண்டாம் என்றும் எல்லாவற்றையும் இனி தான் பார்த்துக்கொளவதாகவும் கூறியுள்ளார். அதோடு "ஜெயிலர்" படப்பிடிப்புக்கு பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதியாக கூறியுள்ளார். இதனால் தற்போது தயாரிப்பாளர் வி.ஏ.துரை நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த அப்போது கொடுத்த 51 லட்சம் :

அதோடு பேட்டியில் பேசிய வி.ஏ.துரை தான் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இருக்கும் போது அதற்காக 51 லட்சம் ரஜினிகாந்த் கொடுத்ததாகவும் ஆனால் அந்த பணத்தை சரியாக பயன்படுத்தி கொல்லாமல் சினிமா மோகம் கொண்டு மொத்த பணத்தையும் இழந்து தற்போது இந்த நிலைமையில் இருக்கும் எனக்கு மீண்டும் ரஜினிகாந்த் உதவி செய்கிறார் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார் இயக்குனர் வி.ஏ.துரை.

behindtalkies AMP · Quick view
View full