ரஜினியின் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது தெரியுமா? வெளியான அதிரடி அப்டேட்

By subhashini · 17/9/2024

'வேட்டையன்' படம் குறித்த புது அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களாக ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

அதிலும் தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் கேலிக்கு உள்ளானது. இதனால் ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று இளம் இயக்குனர்களுடன் கைகோர்க்க தயாரானார் ரஜினி. அந்த வகையில் கடந்த ஆண்டு இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் ஜெயிலர். இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷராப், சிவராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர்.

ஜெயிலர் படம்:

இதனால் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெற்றியை கண்டது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லால் சலாம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் வேட்டையன் படத்தில் நடித்து இருக்கிறார்.

வேட்டையன் படம்:

இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

வேட்டையன் அப்டேட்:

சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் வேட்டையன் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, செப்டம்பர் 20-ஆம் தேதி வேட்டையன் படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த விழா சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

கூலி படம்:

இது தொடர்பான அறிவிப்பை வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முமரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full