சின்ன கவுண்டர் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் சின்ன கவுண்டர். இந்த படத்தில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி, மனோரமா, செந்தில், வடிவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும், இந்த படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி தந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தெலுங்கிலும், கன்னடத்திலும் கூட வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால்,

Advertisement

சின்ன கவுண்டர் படத்தில் சின்ன கவுண்டர் படத்தில் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்க இருந்தார். ஆனால், அப்போது ரஜினி கால்ஷீட் கிடைக்காததால் இந்த படத்தில் விஜயகாந்த் நடித்தார். விஜயகாந்த் நடித்தும் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆகி இருந்தது. சின்ன கவுண்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக விஜயகாந்த் இருந்தார் என்று கூறப்படுகிறது.

அதோடு இன்னும் சின்ன கவுண்டர் படம் பற்றி மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகின்றது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement
Advertisement