மறைந்த நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்துக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது கிடைத்த நிலையில் தற்போது அதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா கேப்டன் என்ற பட்டப்பெயருடன் அனைவராலும் விரும்பப்பட்டு வந்த விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்குவதாக சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.இதை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் இருந்து வாங்கி இருக்கிறார்.

Advertisement

விஜயகாந்தின் மறைவு:

இந்த விருது விழாவில் விஜயகாந்த் உடைய மகன் விஜய பிரபாகரன், மைத்துணரும் தேமுதிக துணை பொது செயலாளர் எல் கே சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்கு ரசிகர்கள், தேதிமுக தொண்டர்களும் பலருமே வாழ்த்தி சந்தோசப்பட்டிருந்தார்கள். மேலும், பத்மபூஷன் விருதை விஜயகாந்தின் நினைவிடத்தில் வைத்து பிரேமலதா அஞ்சலி செலுத்தி இருந்தார்.

இதை அடுத்து அவர் பத்திரிகையாளரை சந்தித்த பிரேமலதா, விஜயகாந்துக்கு காலம் கடந்து இந்த விருது கிடைத்தாலும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். விருது கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி. டெல்லியில் தமிழ் சங்கம் சார்பாக கேப்டனுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அத்தனை பேரும் வந்து உணவருந்தினார்கள் என்று கூறி இருந்தார். கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர் ‘ என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷண் விருது கொடுத்து கௌரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் இந்திய நாட்டின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றைப் பதிவிட்டிருக்கிறார்கள்.

Advertisement

அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரை வீரன் நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அவர் நாமம் வாழ்க’ என்று கூறி இருக்கிறார்.

Advertisement