ரஜினியின் 'கூலி' படம் முதல் நாள் வசூல் வேட்டை செய்ததா? இல்லையா? முழு விவரம் இதோ

By subhashini · 15/8/2025

ரஜினியின் கூலி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் கூலி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

கூலி படத்தின் வசூல்:

இப்படி இருக்கும் நிலையில் கூலி படத்தினுடைய முதல் நாள் வசூல் விவரம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது முதல் நாள் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 30 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்திய அளவில் 65 கோடி, வெளிநாடுகளில் 75 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது . மொத்தத்தில் முதல் நாளிலேயே கூலி படம் 140 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு லியோ படத்தின் வசூலை கூலி முறியடித்ததாக கூறப்படுகிறது. இன்னும் அடுத்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் கூலி வசூலின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=r-tRxt9bBm8

கூலி படம்:

படத்தில் வில்லன் நாகார்ஜுனா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தன்னுடைய ஆட்களை வைத்து தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அதோட தன்னுடைய கூட்டத்தில் மறைந்திருக்கும் கருப்பு ஆடுகளையும் அவர் வேட்டையாடி வருகிறார். நாகர்ஜுனாவிற்கு வலது கையாக தான் சௌபின் இருக்கிறார். இவர் போலீசுக்கு தகவல் சொல்பவர்களை எல்லாம் கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார். இதனால் இந்த கும்பலுக்கு சிக்கல் ஏற்படுகிறது.

படத்தின் கதை:

அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு போலீஸ் உளவாளி இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது.
இதற்கிடையில் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் இறந்த செய்தி வருகிறது. அப்போதுதான் தன்னுடைய நண்பனின் சாவில் மர்மம் இருப்பதை ரஜினிகாந்த் கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் உடைய துணையோடு தன் நண்பன் சத்யராஜை கொண்டவர்களை கண்டுபிடிக்க ரஜினிகாந்த் முயற்சிக்கிறார்.

அதற்குப் பின் வில்லன் நாகர்ஜுனா இருக்கும் இடத்திற்கே சென்று அவரை சந்திக்கும் சூழ்நிலை ரஜினிகாந்துக்கு ஏற்படுகிறது. அதற்குப்பின் சத்யராஜை நாகர்ஜுனாவின் ஆட்கள் தான் கொலை செய்தார்கள் என்பது ரஜினிகாந்துக்கு தெரியவருகிறது. சத்யராஜை எதற்காக கொலை செய்தார்கள்? தன்னுடைய உயிர் நண்பனின் மரணத்திற்கு ரஜினிகாந்த் பழிதீர்த்தாரா? ரஜினிகாந்த்- நாகார்ஜுனா இடையேயான மோதல் என்ன? இருவருக்கும் பின்னணி என்ன? ரஜினிகாந்த் பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full