அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா - நாங்குநேரி சம்பவம் குறித்து ராஜ்கிரண் பதிவு.

By Rajkumar · 14/8/2023

நாங்குநேரி சம்பவம் குறித்து நடிகர் எஸ் வி சேகர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கூலி தொழில் செய்கிறார். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.

இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை தாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

நாங்குநேரி சம்பவம்:

இது தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தும் போலீஸ் வரவில்லை. இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், இந்த சம்பவம் நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் போலீசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் தங்கை இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை:

பின் போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள்.இது குறித்து அவர் பெற்றோரிடமும் தலைமை ஆசிரியர் இடம் கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவு தெரிகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபலங்கள் கண்டனம் :

சாதி வன்மத்தால் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனங்களையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருத்தங்களையும் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ராஜ்கிரண் இந்த சம்பவம் தொடர்பாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ராஜ்கிரண் பதிவு :

அதில் ' நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.

எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது… நாங்குநேரி அவலம்… ' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full