சிவாஜி ஐயா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தது பாக்கியம் என்று ராஜ்கிரண் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் “நல்லி எலும்பு” என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது நடிகர் ராஜ்கிரண் தான். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன்.

திரை உலகிற்காக இவர் ராஜ்கிரண் என்று பெயரை மாற்றி கொண்டார். இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, கொம்பன், வேங்கை, சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை சினிமா திரை உலகில் 30 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவரே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

Advertisement

ராஜ்கிரண் திரைப்பயணம்:

இவர் நடிப்புக்கு கூட கெட்டவனாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறும் உன்னதமான மனிதர். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாம் கிராமப்புற கதைகள், காதல் காவியங்களை கொண்ட கதையாக இருக்கும். தற்போது ராஜ்கிரண் அவர்கள் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். முத்தையா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

ராஜ்கிரண் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் கார்த்தி, அதிதி, பிரகாஷ்ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து ராஜ்கிரண் அவர்கள் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடித்து இருக்கிறார். பின் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரண் நடிக்க இருக்கிறார்.

Advertisement

ராஜ்கிரண் அளித்த பேட்டி:

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ராஜ்கிரன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் நந்தா படம் குறித்து கூறியிருந்தது, பாலா சார் நந்தா படத்தில் முதலில் சிவாஜி சாரை தான் நடிக்க வைக்க இருந்தார். அவரிடம் கதையும் சொன்னார். அவரும் நடிக்கிறேன் என்று ஒத்துக் கொண்டார். பிறகு பிரபு தான் அப்பா கடலோரப் பகுதிகளில் அந்த உப்பு காற்று இடங்களில் நடக்க முடியாது. அவருக்கு உடல் பிரச்சினை இருக்கிறது என்று சொன்னவுடன் பாலா சாரும் சரி ஓகே என்று சொல்லிவிட்டார்.

Advertisement

நந்தா பட அனுபவம்:

பிறகு அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது தான் என்னை என்று முடிவு செய்தார். அதற்கு பிறகு அவர், என்னிடம் வந்து நான் இதை சிவாஜி சாருக்காக எழுதினேன். அவரால் முடியாது என்று பிரபு சொன்னதனால் தான் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டவுடன் சிவாஜி அய்யா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிப்பது நான் செய்த பாக்கியம். இதைவிட வேறென்ன வேண்டும் என்று சொன்னேன். அந்த படத்திற்காக என்னுடைய ஹேர் ஸ்டைல், கெட்டப் எல்லாம் மாற்றி இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement