பொதுவாக “நல்லி எலும்பு” சாப்பிடுவது என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகர் ராஜ்கிரண். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் ராஜ்கிரண்.ராஜ்கிரண் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். ராஜ்கிரண் குடும்பம் மிக எளிய குடும்பம். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் இவருடைய பெற்றோர்கள் இவரை ராஜாவாகதான் வளர்த்து வந்தார்கள். பின் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தார். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை மாற்றிக் கொண்டார்.

இவர் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இதுவரை தமிழில் சினிமா திரை உலகில் 30 படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார். மேலும்,இவரே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவரது படங்கள் முதலில் கொஞ்சம் சரிவை சந்தித்தாலும் நாளடைவில் பிளாக்பஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவில் வெற்றி வாகை சூடியது. அதற்குப் பின்னர் தான் இவர் சினிமா துறையில் நடிக்கத் தொடங்கினார். இவர் பெரும்பாலும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடித்திருப்பார். எவ்வளவு கோடி கொடுத்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறுவார். அதுமட்டும் இல்லாமல் ராஜ்கிரண் அவர்கள் ஓடாத படங்களை வாங்கி வெற்றி படங்களாக மாற்றி உள்ளார். இந்நிலையில் இவர் சினிமா திரையுலகில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்ததும் இவர் தான். நகைச்சுவை வைகைப்புயல் வடிவேல் அவர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்தது நடிகர் ராஜ்கிரண்.

Advertisement

முதலில் ராஜ்கிரண் அவர்கள் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தான் பணிபுரிந்தார். பின் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அரண்மனைக்கிளி, என்ன பெத்த ராசா, நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு பல படங்களில் நடித்தும், பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இவர் பெரும்பாலும் வேட்டி தான் அணிவர். இதனாலேயே இவருக்கு ஒரு முறை வேட்டி விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்து இருந்தார்கள். மேலும், அந்த வேட்டி விளம்பரத்தில் இவருக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்தது. ஆனால், இவர் என்னுடைய நடிப்பிற்கு இவ்வளவு சம்பளம் தந்தால் அந்த பணத்தை எல்லாம் நீங்கள் நூறு ரூபாய் வேட்டிற்கு 500 ரூபாய், 1000 ரூபாய் என்று வைத்து அதிக பட்ஜெட்டில் லாபம் எடுப்பீர்கள். இதனால் ஏழை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என சொன்னவுடன் அவர்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக சென்று விட்டார்கள்.

அதோடு இவர் சினிமா திரையுலகில் கதாநாயகனாக மட்டும்தான் நடித்துள்ளார். நடிப்புக்கு கூட கெட்டவனாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறும் உன்னதமான மனிதர். இவர் கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி 2 படத்தில் நடித்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் கிராமப்புற கதைகளை மையமாகவும், காதல் காவியங்களை கொண்ட கதையாகவும் இருக்கும். இவர் படத்தில் மட்டும்தான் பயங்கர டெரர். ஆனால், நிஜ வாழ்க்கையில் ரொம்ப அமைதியான,சாந்தமான மனிதர். இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இவருடைய குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

Advertisement

இவருடைய முதல் மனைவிக்கும் இவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொண்டனர். மேலும்,ராஜ்கிரண் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. முதலில் கதாநாயகனாக ராஜ்கிரண் அவர்கள் நடித்திருந்தாலும் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமா திரை உலகில் சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார்.

Advertisement
Advertisement