அமரனை தொடர்ந்து மற்றொரு உண்மைச் சம்பவ கதையா? - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன தகவல்
தனுஷின் 55ஆவது படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ராஜ்குமார் பெரியசாமியும் ஒருவர். இவர் முதன் முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். அதனைத் தொடர்ந்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ரங்கூன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் தயாரித்து இருந்தார். கௌதம் கார்த்திக் மற்றும் சனா மக்புல் நடித்திருந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின் இயக்குனர் ராஜ்குமார் இயக்கிய இரண்டாவது படம் ‘அமரன்’. இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு வெளியாகி இருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.
அமரன் படம்:
இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை செய்தது. இந்த படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து இவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிறது.
ராஜ்குமார் பெரியசாமி பேட்டி:
இந்த படத்திற்கு D55 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் சென்னையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு, மீடியா அண்ட் என்டர்டைன்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு என்ற ஒரு கூட்டமைப்பு நடந்திருந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள். அந்த வகையில் இதில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷினுடைய படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், நான் இயக்கம் படத்திற்கு தனுஷ் சார் மாதிரி ஆன நடிகரை தான் தேடிக் கொண்டிருந்தேன்.
"#D55 is not tailored story for #Dhanush sir. When I met him first time, I didn't have any idea, but he gave me the liberty to choose any story🤞. I narrated 2 ideas, he chose one among that, which is based on a real life incident🔥"
— AmuthaBharathi (@CinemaWithAB) February 23, 2025
- Rajkumar Periyasamy pic.twitter.com/AqYaWZnVp8
தனுஷ் குறித்து சொன்னது:
இந்த படத்தின் கதையும் அவருடைய நடிப்பு திறனுக்கு சில விஷயங்களை கொடுக்கும். இந்த படத்தின் கதை முழுமையாக அவருக்கு எழுதப்பட்டது கிடையாது. எந்த கதையும் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை அவர் வைத்திருக்கிறார். நான் அவரை முதலில் சந்திக்கும்போது என்னிடம் எந்த ஒரு கதைக்கான ஐடியாவுமே இல்லை. அந்த சந்திப்புக்கு பிறகு தான் எந்த கதையும் அவருக்கு பொருந்தி போகும் என்று நினைத்தேன். காரணம், எந்த கதையாக இருந்தாலும் அவரிடம் சொல்வதற்கான ஒரு கம்போர்ட்டை கொடுத்தார்.
படத்தின் கதை:
நான் திரையில் இப்படி தெரிய வேண்டும், இந்த மாதிரி கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும், சில கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்ற எந்த ஒரு விதிகளுமே அவர் வைக்கவில்லை. இரண்டாவது முறை நான் அவரை சந்தித்தபோது இரண்டு கதைக்கான ஐடியாவை அவரிடம் சொன்னேன். அந்த இரண்டு ஐடியாவுமே அவருக்கு பிடித்தது. அதில் ஒரு கதை தான் தற்போது கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம். இந்த கதையும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். கூடிய விரைவில் இது தொடர்பான அப்டேட் கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.