1992ல் வெளியான படத்தின் டைட்டிலை வைத்தது ஏன்? அமரன் இயக்குனர் சொன்ன சுவாரசிய விளக்கம்.

By Rajkumar · 19/2/2024

1992ஆம் ஆண்டு வெளியான படத்தின் பெயரை வைத்த காரணம் குறித்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த அயலான் படம் கூட கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இப்படி ஒரு நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். ராணுவ அதிகாரியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டைட்டில் டீசர் கூட வெளியாகி இருந்தது.

அமரன் பெயர் காரணம் :

அமரன் என்ற பெயரில் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்தது. 1992ஆம் ஆண்டு ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. அந்த பெயரை தான் தற்போது இந்த படத்திற்கு வைத்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்த எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன்,மாவீரன் போன்ற படங்களின் பெயரில் ஏற்கனவே படங்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அளித்த விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு ஏன் அமரன் என்று பெயர் வைத்தோம் என்ற காரணத்தை கூறியுள்ள படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ' இதன் திரைக்கதைக்கு நான் எழுதிய முதல் வார்த்தை அமரன். அதற்கு, அழியாதவன், போர்வீரன், தெய்வீகமானவன் என்று அர்த்தம். இந்த நினைவு கூரத்தக்கத் தலைப்பை வழங்க சம்மதித்த இயக்குநர் கே. ராஜேஷ்வர், கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.

யார் முகுந்த் வரதராஜன் :

அமரன் படத்தில் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முகுந்த் வரதராஜன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர். முகுந்தனின் அப்பாவுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரால் செல்ல முடியவில்லை. அவருடைய கனவாக தான் பி காம் ஜர்னலிசம் படித்து முடித்து ராணுவத்தில் சேர்ந்தார் முகுந்த். 2015 ஆம் ஆண்டு 11 ஆம் ஆண்டு ஐநா சபை சார்பில் அனுப்பப்பட்ட அமைதிப்படையில் முகுந்த் இருந்தார்.

வீர மரணம் :

அதற்குப்பின் இவர் மேஜர் ஆகி பல போர்களை சந்தித்து இருந்தார். இந்த ராணுவ போரில் அவர் உடம்பில் நிறைய காயங்களை எல்லாம் வாங்கி இருந்தார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் மேஜர் முகுந்த் தீவிரவாதிகள் எதிரான சண்டையில் கொல்லப்பட்டார்.அந்த சமயத்தில் இவருடைய இறப்பு இந்தியா முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எல்லோருமே அவருக்காக அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.

behindtalkies AMP · Quick view
View full