குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்நடப்பது இதுதான் - டைட்டில் வென்றவுடன் உண்மையை உடைத்த ராஜு

By subhashini · 29/9/2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலாமன நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி’ ஒன்று. இதுவரை இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

மேலும், இந்த முறை ஆட்டம் புதுசு, புது ஸ்கூல், புது ரூல், புது ஜட்ஜ் என்று ஏற்கனவே இருந்த இரண்டு நடுவர்களுடன் மூன்றாவது நடுவராக செஃப் கௌஷிக் என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்த சீசனில் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், உமர் லத்தீப், ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருந்தார்கள்.

குக் வித் கோமாளி:

இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நேற்று தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் இறுதி போட்டியாளர்களாக ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன், உமர், ராஜு ஆகியோர் தன்னுடைய சமையல் திறமைகளை காண்பித்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜு வென்றிருந்தார். இது பலருக்குமே ஷாக்கிங் தான். காரணம், ஆரம்பத்தில் இருந்து இவர் பெரிதாக சமையலில் ஆர்வம் இல்லாமல் தான் இருந்தார்.

டைட்டில் வின்னர்:

இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது இவர் தன்னுடைய திறமையை காண்பித்து முதலிடத்தையும் பெற்று இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் தான் வெற்றி பெற்றார். முதல் பரிசு பெற்ற ராஜுவிற்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை கொடுக்கப்பட்டது. ஷபானா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. இதற்கு பலருமே, இது முழுவதும் ஸ்கிரிப்டு தான். விஜய் டிவி, அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தான் முதல் பரிசை தருவார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் வந்து இருக்கிறது.

View this post on Instagram

A post shared by simple_cuts (@scooby_doo_2.o)

ராஜு சொன்ன விஷயம்:

இந்நிலையில் இது தொடர்பாக நிகழ்ச்சியிலேயே ராஜு, இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஒரு ஸ்கிரிப்ட் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அது உண்மைதான். யார் எங்கு சமைக்க வேண்டும்,நடுவர் எங்கே அமர வேண்டும், கேமரா எங்கே இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்கள் ஸ்கிரிப்ட் தான். ஆனால் மற்ற விஷயங்கள் ஸ்கிரிப்ட் கிடையாது. இங்கு நிறைய உண்மையான தருணங்கள் விஷயங்களும் நடந்து இருக்கிறது. குக்குகளின் உழைப்பு, கோமாளிகளின் நகைச்சுவை என அனைத்துமே உண்மைதான். நான் டைட்டில் வென்றதது கூட ஸ்கிரிப்ட் தான் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full