எனக்காக விஜய் அண்ணா செய்தது பிரமிப்பா இருக்கு - பன் பட்டர் ஜாம் பட விழாவில் பிக் பாஸ் ராஜு சொன்ன விஷயம்
பன் பட்டர் ஜாம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராஜு ஜெயமோகன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். முதலில் இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல சீரியலில் நடித்து இருந்தார். பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜு நடித்திருந்தார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
அதனால் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கொள்ளும் திறமையாக விளையாடி ராஜு முதல்பரிசை தட்டி சென்றார். அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டது. மேலும், நடிகர் ராஜு ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் Rain of Arrows Entertainemt நிறுவனத்தின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் பன் பட்டர் ஜாம் படத்தில் தான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காலம் அவள் வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் சைஸ் ஜீரோ, பாரம் போன்ற படத்திற்கு வசனத்தை எழுதி இருந்தார். மேலும், இந்த படத்தில் ராஜூவுக்கு ஜோடியாக பவ்யா த்ரிகா நடிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ராஜு:
இவர்களுடன் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, விஜே பப்பு, மைக்கேல் தங்கதுரை, சார்லி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். Gen Z தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பை பற்றிய கதை தான் பன் பட்டர் ஜாம். இந்த படம் வருகிற ஜூலை 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சென்னை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் ராஜு, பாக்யராஜ் சாருக்கும் நெல்சன் திலீப் குமார் சாருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்.
பன் பட்டர் ஜாம் படம்:
எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிக்பாஸ் நிகழ்ச்சியும், அதில் என்னை ஜெயிக்க வைத்த மக்களும் தான் காரணம். படத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன். இது மாதிரி மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன். இந்த படம் நல்லா வந்ததற்கான காரணம் இதில் வேலை செய்த அசிஸ்டன்ட் இயக்குனர்கள் தான். காரணம் நானும் ஒரு அசிஸ்டன்ட் இயக்குனர் என்பதால் அவர்களை கௌரவிக்க நினைக்கிறேன். ஜியோ ஹாட்ஸ்டார் இல் நான் எழுதி நடிக்கும் படத்தில் கமிட் ஆகியிருந்தேன். அது தாமதமான நேரத்தில் தான் இந்த படத்தை பண்ணினோம். இதற்கு அனுமதித்த ஜியோ ஹாட் ஸ்டாருக்கு நன்றி. ஜென்சி மக்களுக்கு ஒரு ஆழமான விஷயத்தை எப்படி சொல்வது என்பது இயக்குனருக்கு தெரிந்திருக்கிறது. இந்த வாய்ப்புக்காக அவருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=82QkZsreJZs
படத்தின் ப்ரோமோஷன்:
எல்லோரும் தயாரிப்பாளர் இடம் கதை சொல்ல ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஆனால், இது தயாரிப்பாளருடைய கதை என்பதால் ஈசியாக ஓகே ஆகிவிட்டது. இவர் இப்ப அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு எல்லோருக்கும் ஃப்ரீயா படம் போட்டு காட்டிட்டு ஜாலியா இருக்கார். என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் பணத்தை திருப்பி எடுத்து கொடுத்துட்டா தான் என்னை ஹீரோன்னே ஒத்துக்கொள்வார்.
இந்த படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் பின்னாடியும் நிறைய வலி இருக்கிறது. எல்லோரையும் இந்த படம் காப்பாற்றனும், இனியும் கஷ்டப்பட முடியாது. நான் அம்மா சொல்லி திருந்தின பையன் கிடையாது. சினிமா பார்த்து திருந்தினவன். நிறைய சமூக உணர்வுகள், என்னென்ன செய்யக்கூடாது என்பதை சினிமா பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அப்படி ஒரு மெசேஜை சுகர் கோட் செய்து கொடுத்திருக்கிறார் எங்களுடைய இயக்குனர். கண்டிப்பாக உங்க காசு வேஸ்ட் ஆகாது.
விஜய் பற்றி சொன்னது:
இன்று இன்டர்நெட்டில் எது சரியானது, எதை தப்பா எடுத்துப்பாங்கன்னு தெரியவே இல்லை. எந்த படம் ஓடும், ஓடாதுன்னு கூட தெரியவில்லை. நான் பேசுவதில் எது பெரிசாக பேசப்படும் என கூட தெரியவில்லை. வித்தியாசமான உலகத்தில் இருக்கிற மாதிரி இருக்கிறது. பன் பட்டர் ஜாம் எப்படி நமக்கு எல்லா ஊரிலும் கிடைக்குமோ நம்ம வயிரை கூட கெடுக்காதோ அப்படி ஒரு நீட்டான படமாக இது இருக்கும்னு நினைக்கிறேன். தளபதி விஜய் அண்ணா ஒரு போன் காலில் மொத்த தமிழ்நாட்டையுமே எங்க படத்தை திரும்பி பார்க்க வைத்தார். அவர் என்னை எப்படி பார்க்கிறார், அவருக்கு என்ன பிடிக்கும், எதுக்காக எனக்கு விஷ் பண்ணினார் என்பது பிரம்மிப்பாக இருக்கிறது. நீங்கள் இல்லை என்றால் என்ன பண்ணி இருப்போம் என்று தெரியவில்லை. என்றும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் ஐ லவ் யூ அண்ணா என்று கூறி இருக்கிறார்.