பிக் பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்ததா? முதல் நாளே இவ்வளவு லட்சமா
பன் பட்டர் ஜாம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார்.
இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார். பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜு நடித்திருந்தார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதனால் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ராஜு:
இந்த நிகழ்ச்சியில் திறமையாக விளையாடி ராஜு முதல்பரிசை தட்டி சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது பிக் பாஸ் ராஜு முதன் முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம். இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், ஆதியா பிரசாத், பாவ்யா த்ரிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
பன் பட்டர் ஜாம் படம்:
இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். காதல் நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பன் பட்டர் ஜாம் படத்திற்கு போட்டியாக 11 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. இருந்தாலுமே இந்த படத்திற்கு தான் அதிகப்படியான திரையரங்குகள் கிடைத்திருக்கிறது.
படத்தின் வசூல்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இளசுகள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் 25 லட்சம் வசூல் செய்து இருக்கிறது. நேற்று வெளியான படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இரண்டு நாளும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்தினுடைய வசூல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ ராஜு கல்லூரி செல்கிறார். ஆனால், இவர் யாரையும் காதலிக்க கூடாது. தான் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவருடைய அம்மா சரண்யா பொன்ணன் உறுதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹீரோயினி ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினியும் இதே கொள்கை உடன் தான் இருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை இது லவ் மேரேஜ். ஆனால், பெற்றோர்களுக்கு இது முழுக்க முழுக்க அரேஞ்ச் மேரேஜ். இன்னொரு பக்கம் ஹீரோ ராஜு தன்னுடைய கல்லூரியில் படிக்கும் பாவ்யா த்ரிகாவை காதலிக்கிறார். இறுதியில் ஹீரோ தன்னுடைய அம்மா சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா? இல்லை தன்னுடைய காதலியை கரம் பிடித்தாரா? இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்ட ராஜு என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதி கதை.