பிக் பாஸ் ராஜுவின் 'பன் பட்டர் ஜாம்' படம் ருசித்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 18/7/2025

பிக் பாஸ் ராஜு முதன் முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம். இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், ஆதியா பிரசாத், பாவ்யா த்ரிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். காதல் நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ ராஜு கல்லூரி செல்கிறார். ஆனால், இவர் யாரையும் காதலிக்க கூடாது. தான் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவருடைய அம்மா சரண்யா பொன்ணன் உறுதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹீரோயினி ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினி. இவர் தன் மகளும் யாரையும் காதலிக்க விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

இப்படி சரண்யா - தேவதர்ஷினி இருவருடைய எண்ணமும் ஒன்று என்பதால் இருவருமே தங்கள் பிள்ளைகளை சந்திக்க வைத்து காதலிக்க வைத்து திருமணம் செய்து வைத்து விடலாம் என்று திட்டம் போடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது லவ் மேரேஜ். ஆனால், பெற்றோர்களுக்கு இது முழுக்க முழுக்க அரேஞ்ச் மேரேஜ். இன்னொரு பக்கம் ஹீரோ ராஜு தன்னுடைய கல்லூரியில் படிக்கும் பாவ்யா த்ரிகாவை காதலிக்கிறார்.

இறுதியில் ஹீரோ தன்னுடைய அம்மா சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா? இல்லை தன்னுடைய காதலியை கரம் பிடித்தாரா? இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்ட ராஜு என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதி கதை. ராஜுவிற்கு இதுதான் முதல் படம். இருந்தாலுமே தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவை நடிப்பை காண்பித்திருக்கிறார். முதல் படத்திலேயே ராஜு அனைவரின் கவனத்தையும் எடுத்து இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இவரை அடுத்து படத்தில் வரும் ஆதியா பிரசாத் மற்றும் பாவ்யா இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதன் பின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி இருவருமே தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவாக தங்களுடைய அனுபவ நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். இந்த படம் இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு ஏற்றவாறு இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

தலைமுறை இடைவெளி, நகைச்சுவை என அனைத்தையும் நேர்த்தியாக இயக்குனர் சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தில் வரும் கல்லூரி காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. பாடல்களுமே மனதை தொடும் அளவிற்கு தான் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சிறப்பான படமாக பன் பட்டர் ஜாம் இருக்கிறது.

நிறை:

ராஜு நடிப்பு

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்

கல்லூரி காட்சிகள், எமோஷனல், நகைச்சுவை கலந்த காதல் காட்சிகள்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது

ஆரம்பம் முதல் இறுதி வரை இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார்.

குறை:

சில இடங்களில் தொய்வு

பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைய எதுவும் இல்லை

மொத்தத்தில் பன் பட்டர் ஜாம் - சுவை

behindtalkies AMP · Quick view
View full