நிட்சயம் வரை சென்று நின்ற திருமணம் - ராஷ்மிகாவுடன் தற்போது இருக்கும் உறவு குறித்து முன்னாள் காதலர் அளித்த பேட்டி

By subhashini · 26/9/2023

ராஷ்மிகாவுக்கும் தனக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து பிரபல கன்னட நடிகர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:

பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சமீபத்தில் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் மஜ்னு.

ராஷ்மிகா காதல்:

தற்போது இவர் ரன்பீர் கபருடன் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் அளித்து இருக்கும் பேட்டி தான் இணையத்தில் பேசும் பொருளாக இருக்கிறது. ராஷ்மிகா அவர்கள் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ‘கிரிக் பார்ட்டி ‘ என்ற படத்தில் நடித்து இருந்தார்கள். அதற்கு பின் இவர்களுடைய காதல் திருமணம் வரை சென்றது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது. ஆனால், திடீர் என்று இவர்களுடைய திருமணம் பாதியிலேயே நின்று போனது.

ராஷ்மிகா பற்றி சொன்னது:

இது குறித்து பலரும் பல விதமான காரணங்கள் கூறுகிறார்கள். ஆனால், அதில் எது உண்மை என்றுதான் தெரியவில்லை. அதற்கு பிறகு ராஸ்மிகா தன்னுடைய திரை துறையில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா குறித்து சொன்னது, நானும் ராஷ்மிகாவும் இப்போது கூட மெசேஜ் செய்து கொண்டு தான் இருக்கிறோம். படங்கள் வெளி வரும்போது ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம். ராஷ்மிகாவிற்கு சினிமாவில் நிறைய கனவுகள் இருக்கிறது. அதை அவர் சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். இதனால் தான் தற்போது அவர் நேஷனல் கிரஸ் ஆக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full