தன் முன்னாள் காதலர் நடித்த 'காந்தாரா' குறித்து ராஷ்மிகா சொன்ன பதில். திட்டி தீர்க்கும் ரஷித் ஷெட்டியின் ரசிகர்கள்.
வாரிசு திரைப்படத்தில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா "காந்தாரா" திரைப்படத்தை பற்றி பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. எல்லா நடிகர்களும் சினிமாத்துறைக்கு வந்த சிறிதுகாலத்தில் பிரபலமாக ஆவதில்லை ஆனால் புஷ்பா படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சினிமாத்துறையில் இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் தெலுங்கு கன்னடம் என கலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிலும் இப்போது கலக்கி வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா திரைத்துறையில் 2017ஆம் ஆண்டு வெளியான "கிர்க் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகிறார். 4கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படமானது 50கோடி வரை வசூல் செய்து ஹிட் அடித்து. அதனை தொடர்ந்து "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்க்கு சினிமாவிற்கு அறிமுகமாகிறார் ராஸ்மிகா மந்தனா. பின்பு இவர் நடித்திருந்த "கீதா கோவிந்தா" திரைப்படம் 15 மடங்கு லாபம் கொடுத்து மெகா ஹிட் அடிக்கிறது. மேலும் இப்படத்திற்கு தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, என பல துறைகளில் பல விருதுகளையும் பெறுகிறது.
இந்தியா முழுதும் பிரபலம் :
இப்படி இவர் நடித்து வந்த படங்கள் எல்லாமே ஹிட் அடிக்கவே இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த "பிகில்" திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி தமிழிலும் பிரபலமானார். ஆனால் இவர் "பிகில்" படத்தில் நடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு பிறகு பல முன்னணி பிரபலங்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு என்று பலரின் படங்களில் நடித்து ஹிட் அடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா நடிகர் அல்லு நடித்திருந்த "புஷ்பா" படத்தில் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
கேவலமாக திட்டும் ரசிகர்கள் :
இப்படி மற்ற மொழிகளில் கலக்கிவரும் ராஷ்மிகா தற்போது இந்தியாவின் பிரபல நடிகரான அமிதாப் பச்சனுடன் இணைந்து "குட் பாய்" என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹிந்தி சினிமாவிலும் கால்பதித்து விட்டார். இப்படி இருக்கும் போது நடிகை ராஷ்மிகா முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டார் என்று கன்னட ரசிகர்கள் கோவமடைந்துள்ளார். அதாவது தற்போது கண்டத்தில் வெளியாகி இந்தியாமுழுவதும் வெற்றிநடை போட்டுக்கொன்றிருக்கும் "காந்தாரா" திரைப்படத்தை பார்த்து விட்டிர்களா என்று பேட்டியில் செய்தியாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார். இதனால் கோவமடைந்த கன்னட ரசிகர்கள் நடிகை ராஷ்மிகா மந்தனாவை கொச்சை வார்த்தைகளினால் சுமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இனி கண்டா மக்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது எனவும் தங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
படம் பார்க்காததற்கு இதுதான் காரணமா :
கடந்த 2017ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி தயாரித்திருந்த திரைப்படமான "கிர்க் பார்ட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்பாடத்தின் போதே இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த காதல் நாளடைவில் இருவரும் நித்சயதார்தம் செய்து திருமணம் வரை சென்றது. அதன் பின்னர் சில காரணங்களினால் ரிஷப் ஷெட்டியும் நடிகை ராஷ்மிகாவும் பிரிந்து விட்டனர். அப்போது இவரை கடுமையாக ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் விமர்ச்சித்திருந்தனர். இந்நிலையில் இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கியிருக்கும் "காந்தாரா" திரைப்படத்தை இதனால்தான் பார்க்கவில்லை என்று கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை ஆபாசவார்த்தைகளினால் திட்டி வருகின்றனர்.