என் இதயம் நிறைந்தது, நான் நன்றி கடன் பட்டவள் - ராம் சரணின் மனைவி உபாசனா பகிர்ந்த எமோஷனல் வீடியோ

By subhashini · 10/2/2026

ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார்.

ராம் சரண் அவர்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அந்த வகையில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேன்சர் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ராம்சரண்-உபாசனா:

இதை அடுத்து ராம்சரண் பிசியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு தான் அழகான பெண் குழந்தை பிறந்து. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராம்சரணின் மனைவி உபாசனா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

இரட்டை குழந்தை:

அதோடு இவர் இரட்டை குழந்தைக்கு தாயாகி இருப்பதாக கூறியிருந்தார்கள். மேலும், ராம்சரண்- உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. ஒரு பெண், ஒரு ஆண். இந்த செய்தியை நடிகர் சிரஞ்சீவி சோசியல் மீடியாவில் பதிவு போட்டு இருந்தார். அதில் அவர், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நன்றி உணர்வும் இதயத்தில் நிறைந்திருக்கிறது. ராம்சரண்- உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela)

உபாசனா பதிவு:

இந்த நிலையில் தன்னுடைய கர்ப்பகால பயணத்தை பற்றி உபசனா எமோஷனலாக வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில், இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என்னுடைய இதயம் நெகிழ்கிறது. எங்களை சுற்றியுள்ள அன்பும் நேர்மறை எண்ணங்களுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன். ராம் சரன் ரசிகர்கள் எப்போதுமே எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எங்களுக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full