ரஜினி முதல் ராம் சரண் வரை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு விசிட் அடிக்கும் பிரபலங்கள்

By subhashini · 21/1/2024

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் தென்னிந்திய பிரபலங்கள் குறித்த பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா குறித்த செய்தி தான் பேசப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே.

இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி அதாவது நாளை திறக்கப்பட இருக்கிறது. அந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தர இருக்கிறார்கள்.

அயோத்தி ராமர் கோவில் விழா:

மேலும், இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பட்டியல்,

ரஜினிகாந்த்:

என்றென்றும் தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் ஆன்மீகத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவர். இவர் வருடம் வருடம் இமய மலைக்கு சென்று வருகிறார். தற்போது நாளை நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பி இருக்கிறார்.

மோகன்லால்:

மலையாள சினிமாவில் மிக பிரபலமான ஸ்டாராக திகழ்பவர் மோகன்லால். தற்போது இவருடைய நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்த படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகளில் பிஸியாக மோகன்லால் இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு வந்ததால் கண்டிப்பாக இவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரஞ்சீவி:

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போதும் இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருக்கிறது.

ராம்சரண்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் தான் ராம்சரண். இவருடைய மனைவி உபசனா. இவர்கள் இருவருக்குமே கோயில் அதிகாரிகள் வந்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதனால் இவர்கள் இருவருமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் செட்டி:

காந்தாரா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாக அறியப்பட்டவர் ரிஷப் செட்டி. இவரும் கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

தனுஷ்:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் கேப்டன் மில்லர். இவரும் அதிக அளவு கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர். இவருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று இது கூறப்படுகிறது.

பிரபாஸ்:

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்வர் பிரபாஸ். கடந்த ஆண்டு ராமாயணத்தை வைத்து எடுக்கப்பட்ட ஆதிபுருஸ் படத்தில் ராமராக பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் ராமராக இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபாஸ் பதிந்து விட்டார். அது மட்டும் இல்லாமல் ராமர் கோயில் திறப்பு விழா அன்று கொடுக்கப்படும் உணவுக்காகும் மொத்த செலவின் பொறுப்பையும் பிரபாஸ் ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full