தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வைபவ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரணம் அறம் தவறேல். இந்த படத்தை இயக்குனர் ஷெரிஃப் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ரோல் குரோலி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை மது நாகராஜன் தயாரித்திருக்கிறார். கிரைம், திரில்லர் பாணியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சென்னையில் பல இடங்களில் கை, கால், உடம்பு என்று தனித்தனியாக எரிக்கப்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றது. இதனால் போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காவல் நிலையத்தில் குற்றசெயலுக்கான க்ரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளின் உருவங்களை ஸ்கெட்ச் செய்பவராக வைபவ் இருக்கிறார். இவர் இந்த மர்ம கொலைகளுக்கு போலீசுக்கு உதவ வருகிறார். பின் ஹீரோவின் முயற்சியால் கிடைக்கப்பட்ட உடல் பாகங்கள் எல்லாம் வெவ்வேறு நபருடையது என்று தெரிய வருகிறது.

Advertisement

இப்படி இருக்கும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் காணாமல் போகிறார். இதனால் இந்த வழக்கு தான்யா விடம் கொடுக்கப்படுகிறது. மேலும், வைபவ்- தான்யா இருவரும் இணைந்து இந்த கொலைகளை செய்யும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளின் இவர்கள் நெருங்கும் போது அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றது. இறுதியில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? குற்றவாளியின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

படம் முழுக்க வைபவ்- தான்யா சுற்றி தான் கதை நகர்கிறது. இந்த படத்தில் வைபவ் சிறப்பாக நடித்திருக்கிறார். இது இவருடைய 25 ஆவது படம் என்பதால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருப்பதற்கு பாராட்டுக்கள். இவரை அடுத்து போலீஸ் அதிகாரியாக வரும் தான்யாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்தாலும் அழுத்தமான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை.

Advertisement

படத்தின் ஆரம்பத்தில் கொலைகளும், காரணம் என்ன? என்று ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இடைவெளி வரை படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளில் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பின்னணி இசை, ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்து இருக்கிறது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வைபவ்க்கு கம்பேக் கொடுத்திருக்கிறது.

Advertisement

நிறை:

வைபவ் நடிப்பு சிறப்பு

கதைக்களம் நன்றாக இருக்கிறது

முதல் பாதி சூப்பர்

க்ரைம் திரில்லர் கதை

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

குறை:

இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

இறுதியில் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

சில கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையே இல்லை

சில காட்சிகளை சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்

மொத்தத்தில் வைபவின் ரணம் அறம் தறவேல்- கிரைம் ரசிகர்களுக்கு பிடிக்கும்

Advertisement