500 கோடி கொடுத்தாலும் இது போன்ற காட்சிகளில் மட்டும் நடிக்கவே மாட்டேன் - ராமராஜன் பாலிசி

By Arun · 8/4/2024

போதைப்பொருள் தொடர்பாக நடிகர் ராமராஜன் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும். சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன்.

அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இதனிடையே ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பின் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி.

ராமராஜன் குறித்த தகவல்:

மேலும், ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து கொண்டாலும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை சேர்ந்தே நடத்தி வைத்து இருந்தார்கள். ராமராஜனின் மகள் அருணா பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தற்போது நளினி சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். ராமராஜன் தன்னுடைய அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ராமராஜன் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

ராமராஜன் நடிக்கும் படம்:

இவர் சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது. அதோடு சமீபத்தில் தான் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இடப்பதற்க்கான வெளியிடும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்காக இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4ல் சிறப்பு விருந்தினராக கலந்து இருந்தார்.

இந்த நிலையில் போதைப்பொருள்கள் குறித்து நடிகர் ராமராஜன் கூறிய கருத்து தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சிகரெட், குடி போன்ற போதை தரும் பொருட்களை சினிமாக்களில் அதிகமாக பயன்படுத்துவதால் தான் நிஜ வாழ்க்கையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறார்கள். இது வரும் தலைமுறையினரை ரொம்ப பாதிக்கும் வகையில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ராமராஜன் பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ராமராஜன், 500 கோடி கொடுத்தாலுமே நான் படங்களில் சிகரெட், சரக்கடிக்கும் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று கூறி இருக்கிறார். அதோடு பெரும்பாலும் ராமராஜன் படங்களில் போதைப்பொருள் சம்பந்தமான காட்சிகளில் நடித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் ராமராஜனை பாராட்டி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full