90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் இருந்தே அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும். சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இதனிடையே ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பின் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி. நடிகர் ராமராஜன் – நளினியின் மகன் ஆர் அருண். ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து கொண்டாலும், மகனின் திருமணத்தை சேர்ந்தே நடத்தினர்.

Advertisement

ராமராஜனின் குடும்பம்:

மேலும், ராமராஜனின் மகள் அருணா. இவர் பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேபோல் தன் மகளின் திருமணத்தையும் இருவரும் சேர்ந்து நடத்தி வைத்து இருந்தார்கள். தற்போது நளினி சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். ராமராஜன் தன்னுடைய அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ராமராஜனின் அக்கா ராமராஜனின் அக்கா புஷ்பவதி காலமாகி இருக்கிறார்.

மறைந்த சகோதரி புஷ்பவதி

ராமராஜனின் அக்கா :

நான் ராமராஜனின் அக்கா. ராமராஜனுடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணா, ஒரு அக்கா. இதில் ஒரு அக்கா சத்துணவு அமைப்பாளராக வேலை செய்தவர். இதில் கடைசியில் பிறந்தவர் தான் ராமராஜன். ராமராஜனின் உண்மையான பெயர் குமரேசன். ராமராஜனுக்கு சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம். அதனால் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் நடித்திருக்கிறார்.

Advertisement

ராமராஜனுக்கு கிடைத்த படவாய்ப்பு:

பின்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு சினிமா தியேட்டரில் வேலை கிடைத்தது.அப்போது தான் அவருக்கு பிரபல இயக்குனரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக படங்களில் வேலை செய்து இருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே படிப்படியாக படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ராமராஜன் அடிக்கடி அவரது அக்கா வீட்டுக்கு செல்வார்.

Advertisement
வைரந்தாள்

ராமராஜனின் அக்கா மரணம்:

கொரோன தொற்று காரணமாக தான் அவர் இரண்டு வருடங்களாக இங்கு வரவில்லை. இருந்தாலும் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் ராமராஜனின் அக்கா புஷ்பவதி காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 75. தனது அக்காவின் இறப்பு செய்தியால் உடைந்துபோன ராமராஜன், தனது சொந்த ஊரான மதுரையில் உள்ள மேலூருக்கு உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளார். இன்று ராமராஜனின் புஷ்பவதியின் இறுதி சடங்குகள் நடக்கவிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement