முதலில் கலரா இருப்பார்னு அவரை போடலாம்னு நெனச்சேன். ஆனால், ராமராஜன் அவரை போல வெள்ளையாக இருக்கணும்னு இதை பண்ணார் - கங்கை அமரன்.

By Rajkumar · 18/6/2020

என்னென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் "கரகாட்டக்காரன்". இந்த படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் அனுபவங்களை கங்கை அமரன் அவர்கள் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியது, இன்றைக்கும் கரகாட்டக்காரன் படத்தை எங்கு பார்த்தாலும் எனக்கு நிறையபேர் போன் செய்கிறார்கள். பல வருடங்கள் கடந்தாலும் இன்றைக்கும் அந்தப் படம் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது.

மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையவது இந்த படத்தை டிவியில் போட்டாலும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். முதலில் இந்த படம் குறித்து தவறான விமர்சனங்கள் வந்தாலும் நாட்கள் செல்ல ரசிகர்கள்,பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினி, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்கள்.

எப்போதும் கரகாட்டகாரர்கள் கேலியும் கிண்டலும் நக்கலும் எனப் பேசிக்கொண்டிருப்பார்கள்.மேலும் இந்த படத்தில் ராமராஜன் கமிட் ஆனது எப்படி என்ற சுவாரசியமான தகவலை சொன்ன கங்கை அமரன் அந்த சமயத்தில் கிராமத்து லுக் என்றால் அது ராமராஜன் தான் அதனால் தான் அவரை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்து விட்டோம்.

https://www.youtube.com/watch?v=WTyV1EeXlVQ

மேலும், இந்த படத்திற்கு முதலில் நாயகனாக மோகனை போடலாம் என்று எண்ணம் இருந்தது அதற்கு காரணம் மோகன் மிகவும் கலராக இருப்பார் ஆனால் ராமராஜன் கலரை ஏற்றுக்கொண்டார் மேக்கப் அதிகமாக போட்டுக்கொண்டார்.கரகம் ஆடுபவர்கள் அப்படித்தான் போட்டுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார் கங்கை அமரன்.

behindtalkies AMP · Quick view
View full