இலங்கையில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை தாக்கி போலீசார், மேடையில் கடுப்பாகி கத்திய ரம்பா.

By Manikandan · 10/2/2024

தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி ஸ்னேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல தொடை அழகி என்ற வித்யாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் நடிகை ரம்பா. தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் ரம்பா டிவி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு மட்டும் சென்று வருகிறார்.

https://www.youtube.com/watch?v=nL0BvoDzrJs

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு சென்று இருந்தார் நடிகை ரம்பா. அவரது கணவர், 2 மகள்கன், ஒரு மகன் என குடும்பதோடு இலங்கை வந்துள்ள நடிகை ரம்பாவின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக நடிகை ரம்பா ரசிகர்களிடம் கடிந்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’  என்ற விழா இலங்கையில் யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் நடிகை தமன்னா, கலா மாஸ்டர் போன்றவர்களும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்களும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

https://twitter.com/chettyrajubhai/status/1756227624719040798

இந்த விழாவில் விஐபிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்ட்ரி இலவசம் என்பதால் இந்த விழாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அப்போது விஐபிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்று இருக்கிறார்கள்.இதனால் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் ரசிகர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தள்ளுமுள்ளில் சிலருக்கு மூச்சு திணறல் கூட ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்த பிரபலங்களும் நிகழ்ச்சியையும் நடத்த முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.

https://twitter.com/breesnove28/status/1756173862268510340

இப்படி ஒரு நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மேடையில் இருந்த நடிகை ரம்பா ' கொஞ்சம் அமைதியாக இருங்கள் பெரிய பெரிய அதிகாரிகள் கூட நல்லபடியாக ஒத்துழைக்கிறார்கள் நீங்கள் ஏன் ஒத்துழைக்க மாட்டீர்கள். உங்களை நம்பி தானே வந்திருக்கிறோம் தயவு செய்து காவல்துறையினருக்கு கொஞ்சம் ஒத்துழையுங்கள் என்று ரொம்ப மிகவும் காட்டமாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full