விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மகளின் தற்போதய நிலை - ரம்பா வெளியிட்ட வீடியோ.

By Arun · 8/11/2022

தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி ஸ்னேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல தொடை அழகி என்ற வித்யாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் நடிகை ரம்பா. 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித், ரஜினி போன்ற அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து காலாக்கி வந்த ரம்பா. மேலும், தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.

ரம்பாவின் குடும்பம் :

தொடர்ந்து படங்களில் நடித்து ரம்பா பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வந்தார்..ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண் குழந்தையும் பிறந்தது.

கார் விபத்து :

கடந்த மாதம் தான் தனது மகனின் 4வது பிறந்தநாளை கூட கொண்டாடி இருந்தார் ரம்பா. மேலும், ரம்பா பிள்ளைகள் அனைவரும் ஒரே பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். இவர்களை அவ்வப்போது ரம்பாவே தனது காரில் சென்று பள்ளிக்கு விட்டு வருவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரம்பா தனது பிள்ளைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு காரில் அழைத்து வந்த போது விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

மருத்துவமனையில் மகள் :

இதுகுறித்து தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்ட ரம்பா 'பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுகொண்டார்.

ரசிகர்கள் ஆறுதல் :

மேலும், விபத்திற்கு பின் தன் காரின் புகைப்படத்தையும் தன் மகள் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரம்பாவிற்கு ஆறுதல் கூறிவந்தனர். மேலும், உங்கள் மகள் விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆறுதல் கூறி வந்தனர். தற்போது ரம்பாவின் மகள் உடல்நலம் சரியாகி வீடு திரும்பிவிட்டாராம். விபத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை மாற்றி வருவதாக நடிகை ரம்பா வீடியோக்கள் நிறைய பதிவு செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full