நான் என்ன மனோரமா மாதிரி காமெடி ஆர்டிஸ்ட்டா- சரோஜோ தேவி பற்றி ரமேஷ் கண்ணா சொன்ன விஷயம்
நடிகை சரோஜாதேவி பற்றி ரமேஷ் கண்ணா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் துணை இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகனாக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருந்தார். அதோடு நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் இயக்குனர், வசனகர்த்தா என பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் ஆண்பாவம், பூவேஉனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து போன்ற பல்வேறு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
ரமேஷ் கண்ணா பற்றிய தகவல்:
அதேபோல,, இவர் கேஎஸ் ரவிக்குமாரிடம் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். இடையில் சில ஆண்டுகள் இவர் நடிக்கமால் இருந்தார். பின் இவர் நடிக்க தொடங்கி விட்டார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரமேஷ் கண்ணா, 'ஆதவன்' படத்தில் 'நீ அப்படியே மேல போ ஒரு அம்மா நிறைய பவுடர் போட்டு படுத்து இருக்கும் அவங்கதான்' என்கிற காட்சிக்காக என்னை சரோஜாதேவி அம்மா திட்டு திட்டுன்னு திட்டினாங்க.
ரமேஷ் கண்ணா பேட்டி:
அந்த டயலாக்கை வடிவேல் சொந்தமாக போட்டு விட்டான். அந்த அம்மா எனக்கு போன் பண்ணி, ரமேஷ் கண்ணா நான் உங்ககிட்ட நடிக்க சான்ஸ் கேட்டேனா, நீங்களா என்னை கூப்பிட்டீங்க. நடிக்க வச்சுட்டு இப்படி எல்லாம் டயலாக் போடுறீங்க என்று கேட்டாங்க. அதற்கு நான் அந்த ஆளு லூசு மாதிரி பேசிட்டான் மா, அது ஒன்னும் தப்பில்லை என்றேன். அதற்கு அவங்க, நான் என்ன மனோரமா மாதிரி காமெடி ஆர்டிஸ்ட்டா. நான் ஒரு ஹீரோயின் என்றெல்லாம் சொன்னாங்க .
சரோஜா தேவி குறித்து சொன்னது:
அப்புறம் அந்த பிரச்சனை சரியாகிவிட்டது. என்னுடைய இரண்டாவது பையனுக்கு பெங்களூர்ல தான் கல்யாணம் ஆச்சு அதுக்கெல்லாம் வந்தாங்க என்று கூறி இருக்கிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆதவன். இந்த படத்தில் கதை ஆசிரியராக ரமேஷ் கண்ணா பணியாற்றி இருந்தார்.
ஆதவன் படம்:
இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, ஆனந்த் பாபு, முரளி, சரோஜா தேவி உட்பட பாபு, நடித்து இருந்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. மேலும், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்தது.