சௌந்தர்யா வளர்ச்சியை நான் பக்கத்தில் இருந்து பார்த்தவள் - எமோஷனலாக ரம்யா கிருஷ்ணன் சொன்னது
நடிகை சௌந்தர்யா பற்றி ரம்யா கிருஷ்ணன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 44ஐ கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ரம்யாகிருஷ்ணன். இவர் தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார்.
இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு புகழ் பெற்ற நடிகை. தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் ‘வெள்ளை மனசு’.
அதன் பின்னர் ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் இவர் 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழி படஙகளில் நடித்து வந்தார்.
ரம்யா கிருஷ்ணன் குறித்த தகவல்:
மேலும், இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது படையப்பா படத்தில் தான். அதன் பின் பாகுபலி படத்தில் சிவகாமி என்ற ரோலில் நடித்து தனக்கென ஒரு சிம்மாசனத்தை தென்னிந்திய சினிமாவில் பிடித்து இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தற்போது இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் மிரட்டி கொண்டு வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்கள் சௌந்தர்யா குறித்து கூறிய விஷயம் தான் தற்போது வைரலாகி வருகிறது. சௌந்தர்யாவின் புகைப்படத்தை பார்த்தவுடன் ரம்யா கிருஷ்ணன் கண்களில் கண்ணீர் வந்தது. பின் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஒரு குழந்தை போன்றவர். ரொம்ப அப்பாவி பெண்ணாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு இளம் தேவதையாக உருவாக்கிக் கொண்டார். அவருடைய வளர்ச்சியை நான் பக்கத்தில் இருந்து பார்த்தவள்.
https://www.youtube.com/shorts/kxBZYROpzjo
சௌந்தர்யா பற்றி சொன்னது:
அதேபோல் தன்னுடைய புகழ் எப்போதுமே தன்னை மாற்றி விடக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். சௌந்தர்யா எனக்கு ரொம்ப சிறந்த தோழி. அவர் ரொம்ப ரொம்ப மனித நேயம் கொண்டவர் என்றெல்லாம் எமோஷனலாக பேசியிருக்கிறார். இதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீனா, சௌந்தர்யா பயணித்த விமானத்தில் நானும் செல்வதாக இருந்தது. ஆனால், அவர் அரசியல் பணி காரணமாக சென்றார். நான் ஷூட்டிங் உள்ளது என்று பொய் சொல்லி விட்டேன் என்று கூறியிருந்தார்.