ரம்யா நம்பீசனுக்கு திருமணமா. புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம். இதான் காரணம்.

By Rajkumar · 17/12/2019

நடிகை ரம்யா நம்பீசனுக்கு கல்யாணம் ஆகி விட்டதாம்!!! இதனால் சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். உண்மையாகவே நடிகைகள் திருமணம் என்றால் போதும் ரசிகர்கள் தான் பயங்கர சந்தோஷத்தில் ,குஷியில் மூழ்கி போவார்கள். அதிலும் கனவு கன்னிகள் திருமணம் நடந்தால் போதும் ரசிகர்கள் அதிர்ந்து போய் விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் எப்போதுமே கனவு கன்னியாக தான் திகழ வேண்டும் என்று நினைப்பார்கள். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகை ரம்யா நம்பீசனுக்கு திருமணம் ஆகிவிட்டது என கூறி வருகிறார்கள். அதோடு சமீப காலமாகவே முன்னணி நடிகைகளுக்கு அடுத்தடுத்து திருமணம் நடந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் நடிகை ரம்யா நம்பிசன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இது குறித்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை ரம்யா நம்பிசனுக்கு திருமணம் முடிந்து விட்டதா? எப்பொழுது நடந்தது? மாப்பிள்ளை யார்? என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதற்கு ரம்யா நம்பீசன் அவர்கள் கூறியது, எனக்கு திருமணம் ஆகவில்லை. நான் புதிதாக பத்ரி இயக்கத்தில் ரியோ ராஜ் உடன் படத்தில் நடிக்கிறேன். அந்த படம் பற்றிய அப்டேட்டை தான் பகிர்ந்து உள்ளார். அப்படா இப்ப தான் உயிரே வந்துச்சு என ரசிகர்கள் மகிழ்ந்து வருகிறார்கள். நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு காத்த புருசன் என்ற மலையாளத் திரைப் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர் என பன்முகங்கள் கொண்டு உள்ளார்.

மேலும், ரம்யா நம்பீசன் அவர்கள் மலையாள மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ராமன் தேடிய சீதை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம்,பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதோடு நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் பல படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்திலே நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி உள்ளார். அதில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்தும் வருகிறார்.

https://twitter.com/nambessan_ramya/status/1205449646136381441

சினிமாவை தாண்டி புதிதாக தொழிலும் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் அவரை பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கூட ரம்யா நம்பீசன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என ஒரு வதந்தி கிளம்பியது. அதுவும் அவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் காதலித்தார் என்றும், அவரையே ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறி வந்தார்கள். ஆனால்,அதற்கு நடிகை ரம்யா அவர்கள் மறுப்பு தெரிவித்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full