கடைதிறப்பிற்கு ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் சென்ற ரம்யா பாண்டியன். வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 10/12/2019

சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் சட்டென்று பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிங்கர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பாண்டியன் அவர்கள் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார்.

குறும் படங்களுக்கு பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின எனவும் சொல்லலாம். இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக "ஆண்தேவதை" என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இதையும் பாருங்க : சில்க் ஸ்மிதாவிடம் இருந்து வந்த கடைசி கால். இறப்பிற்கு முன் நடந்த ரகசியத்தை உடைத்த நடிகை அனுராதா.

மேலும், ரம்யா பாண்டியனின் நடிப்பு எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தால் கூட திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் எப்போதுமே குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் தேடித் தேடி நடித்து உள்ளார். இந்நிலையில் அவருக்கு புதியதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அண்மைக் காலத்தில் போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வந்தார். இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் அவர்கள் நேர்த்தியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டார்.

சமீபத்தில் கூட நடிகை ரம்யா பாண்டியனின் ஆபாச புகைப்படங்கள் சில இணையத்தளங்களில் பரவவே பத்திரிப்போன ரம்யா பாண்டியன் போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படி பிரச்சனைகளை சந்தித்தாலும் அம்மணியின் கவர்ச்சி மட்டும் சற்றும் குறையவில்லை. சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றிருந்த ரம்யா பாண்டியன், உடல் தெரியும்படியான டிரான்ஸ்பரன்ட் ஆடையில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full