பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் மட்டும் தொகுப்பாளராக வந்த பிரபல நடிகை.! வீடியோ இதோ.!

By Rajkumar · 1/9/2019

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரமாக வே மிகவும் போராக போய்க்கொண்டிருக்கிறது ஆனால் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நடந்துகொண்டு வருகிறது.

https://twitter.com/StarMaa/status/1167734498135379970

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்துள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார் இரண்டாவது சீசனில் நானே தொகுத்து வழங்கினார் இந்த நிலையில் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் இரண்டு சீசன் களை விட தற்போது நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் மூன்றாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தை மேலும் கூட்ட இந்த சீசனுக்கு பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு நாள் மட்டும் சிறப்பு தொகுப்பாளராக அழைத்து வரப்பட்டு உள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழைப் போலவே தெலுங்கு சினிமா சினிமாவிலும் மிகவும் பிரபலமானவர் தான். மேலும், பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்துக்கொண்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரது திடீர் வருகையால் தெரிந்து ரசிகர்கள் மிகவும் ஷாக் அடைந்துள்ளனர் இதே போல தமிழிலும் சில எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full