OPPO விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ, வைரல் ஆனது.

By Arun · 27/1/2023

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவரின் போனை தூக்கி எறிவது போன்ற ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமா ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு விட்டார் பெற்றோர்களும் பச்சை கொடி காட்டினார். இதனால் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினர்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான “பிரம்மாஸ்திரா” என்ற திரைப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படடிப்பட்ட நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் :

இந்த திருமணமானது ரிஷி கபூர் மற்றும் நீத்து கபூர் திருமணத்தை போலவே பிரம்மாண்டமாக ரம்பீர் கபூர் மற்றும் ஆலியாக்கும் செம்பூரில் உள்ள ஆர்கே இல்லத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தனர். நான்கு ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

வைரலான வீடியோ :

சமீபத்தில் ரன்பீர் கபூர் பற்றிய வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவர் செல் போனை தூக்கி எறிவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மீதி விமர்சனங்கள் எழுந்த நிலையில் உண்மை என்ன என்பது என்று தற்போது தெரியவந்துள்ளது.

உண்மையில் நடந்தது :

அதாவது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி எரிந்ததாக வெளியாகிய அந்த வீடியோவின் முழு பதிவை OPPO நிறுவனம்வெளியிட்டது. அதில் "இந்த வீடியோவில் உள்ள நபரின் பழைய செல்போனை தூக்கி எரிந்து விட்டு புதிதாக OPPO மாடல் போனை ரன்பீர் கபூர் பரிசளிப்பது போன்ற வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரியில் வெளியாகும் இந்த OPPO நிறுவனத்தின் புதியவகை செல்போனின் விளம்பரம் தான் இது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

மேலும் இந்த விடியோவில் பழைய போனுடன் வரும் அந்த நபரும் ஒரு நடிகர் என்பதும் அவருடைய பெயர் நைனேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவுயும் போட்டுள்ளார். அந்த பதிவில் "வணக்கம் நண்பர்களே, இந்த விடியோவில் இருப்பது நான் தான், அவர் என்னுடைய போனை தூக்கி எரியவில்லை, அவர் மிகவும் நல்லவர் என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Nainesh Karamchandani (@__nainesshhh)

இதிலிருந்து தெரிய வருவது ரன்பீர் கபூர் அந்த ரசிகரின் போனை தூக்கி எரியவில்லை, அது ஒரு விளம்பரத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒரு படப்பிடிப்பு என்பது தெளிவாக தெரிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full