ஜெயலலிதா அருகில் அமர்ந்து நடித்துள்ள ரங்கம்மா பாட்டி - ப்பா, எப்படி இருந்துள்ளார் பாருங்க. இதோ புகைப்படம்.

By Rajkumar · 8/1/2022

தமிழ் சினிமா உலகில் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கே.ஆர்.ரங்கம்மாள் பாட்டி. இவருக்கு தற்போது 83 வயது ஆகிறது. இவர் சென்னை வடபழனி குமரன் காலனியில் வசித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், இந்தி என பிற மொழி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து தற்போது இருக்கும் நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் படத்தில் இவர் வடிவேலுடன் இணைந்து நிறைய காமெடி காட்சியில் நடித்துள்ளார். இதுவரை இவர் 500க்கும் மேல் படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது பட வாய்ப்பு இல்லாததால் வறுமையில் வாடுகிறார் ரங்கம்மாள் பாட்டி. இருந்தும் இவர் பிறர் கை ஏந்தாமல் மெரினா கடற்கரையில் கைக்குட்டைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். ரங்கம்மாள் பாட்டி தற்போது தன்னுடைய கடைசி காலகட்டத்தில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தனியாக தவித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரங்கம்மா பாட்டியிடம் பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது.

ரங்கம்மா பாட்டி அளித்த பேட்டி:

அதில் ரங்கம்மா பாட்டி கூறியது, நான் எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, ரஜினி, கமல், ராகவலரன்ஸ் போன்ற பல நடிகர்களுடன் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போ உடம்பு முடியாமல் இருப்பதால் படங்களில் நடிக்க முடியவில்லை. சமீபத்தில் தான் மருத்துவமனையில் இருந்து நான் வந்தேன். என் வீட்டை லாரன்ஸ் மாஸ்டர் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள். அவர் ஏதாவது உதவி செய்வார். நான் நடித்த முதல் படமே எம்ஜிஆர் உடைய விவசாயி படத்தில் தான் நடித்தேன். என்றும் மறக்க முடியாது.

ரங்கம்மா பாட்டி குடும்பம்:

என்னுடன் மொத்தம் பிறந்தவர்கள் 10 பேர். எல்லாருமே நல்லா தான் வாழ்ந்தோம். பின் எனக்குப் பன்னிரண்டு பிள்ளைகள். 12 பேரில் இரண்டு பேர் தான் இருக்கிறார்கள். மீதி எல்லாரும் எங்கெங்கேயோ போய்விட்டார்கள். நான் சம்பாதித்த பணத்தை பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். இப்போதும் நடிக்க தயாராக இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியில்லை. இதனால் கடற்கரையில் கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். அதேபோல் என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்து வந்தேன்.

ரங்கம்மா பாட்டி வறுமை நிலை:

ஆனால், அதை வெளியில் சொல்ல மாட்டேன். எனக்கு சில வருடமாக உடம்பு சரியில்லாமல் படுத்து விட்டேன். அப்போது நிறைய செலவாகி விட்டது. அதனால் தான் வறுமை வந்து விட்டது. இருந்தும் இப்பவும் நான் தொழில் செய்து தான் இருக்கிறேன். புடவை, கர்சீப் என்று விற்று கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு யார்கிட்டேயும் உதவி கேட்க தோன்றவில்லை. உழைத்து தான் சாப்பிட வேண்டும். யாரிடமும் கை ஏந்தி நிற்க கூடாது என்று எம்ஜிஆர் சொன்னதை நான் பின்பற்றுகிறேன்.

ஜெயலலிதாவுடன் நடித்துள்ள ரங்கம்மா பாட்டி :

எனக்கு ஒரு சின்ன வீடு மட்டும் கட்டிக்கொடுத்தல் போதும் நான் சம்பாதிச்சு சாப்ட்டுக்குறேன் என்றார். இந்த நிலையில் இவர் ஜெயலலிதாவின் அருகில் அமர்ந்து நடித்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. 1973 ஆம் ஆண்டு முத்தாரமன், ஜெயலலிதா நடிப்பில் வெளியான 'சூரியகாந்தி' படத்தில் இடம்பெற்ற 'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு' என்ற பாடலில் ஜெயலலிதாவின் அருகில் அமர்ந்து இருப்பது ரங்கம்மா பாட்டி தானாம். இதை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ.

Tamil Behind Talkies AMP · Quick view
View full