தல 59 படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் இது தான்..!சூப்பர் ரோல் தான்..!

By Rajkumar · 15/12/2018

அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று அனைவருக்கும் தெரியும்.

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். மேலும், இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'பிங்க்' படத்தின் ரீ-மேக் என்றும் கூறப்படுகிறது.

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் ஒரு வழக்கறிஞ்சராக நடித்திருப்பார். அவருடன் மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆத்விக் மற்றும் நஸ்ரியா கமிட் ஆகியுள்ளனர்.

மேலும், இந்த படத்தில் பிரபல செய்தியாளராக ராங்கராஜ் பாண்டேவும் கமிட் ஆகியுள்ளார். அவர் இந்த படத்தில் அவர் அஜித்திற்கு எதிராக வாதாடும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil Behind Talkies AMP · Quick view
View full