'வேற லெவல் கெட்டப்பில் சியான்' - ரஞ்சித் இணையும் படத்தின் டீசர் இதோ. படம் பெயர் என்ன தெரியுமா ?

By Siva · 23/10/2022

விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய நடிப்பிற்கு தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் “கோப்ரா”.

விக்ரம் நடித்த படங்கள்:

இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி நடித்து இருக்கிறார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் வெளியாகி இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

விக்ரம்-ரஞ்சித் கூட்டணி:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருக்கிறது. அதற்கான லோகேஷனை தான் ரஞ்சித் தேடி கொண்டு இருந்தார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது.

படம் குறித்த தகவல்:

அதில் விக்ரம், ரஞ்சித், ஞானவேல் ராஜா, ஜி வி பிரகாஷ் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவை இயக்குனர் காண்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் டீவ்ட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுஇருந்தார்.

https://www.youtube.com/watch?v=Dkbiq3QrpG4

படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் :

அதில் அவர், சியான் 61 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது. இது ஒரு கில்லர் ரைடாக இருக்கப்போகிறது. இசையைப் பொறுத்தவரை மிகவும் சுவாரசியமான கதை என்று கூறி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவிலேயே நடைபெற இருப்பதாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தங்கலான் என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full