முட்டைய அடிகிறது, மட்டமாக நடத்துவது தான் டெவில் vs ஏஞ்சல் டாஸ்கா? - பிக் பாஸ் ஏ.டி.கே பதிவிட்ட வீடியோ

By subhashini · 5/12/2024

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் தொடங்கி 60 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.

பிக் பாஸ் 8:

கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சிவகுமார் தான் வெளியேறி இருந்தார்.
மேலும், ஒன்பதாம் வாரத்தில் ஏஞ்சல்-டெவீல் சுற்று நடைபெற்றிருக்கிறது. எப்போதுமே இந்த டாஸ்க் வந்தாலே பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறி விடும். அந்த வகையில் இந்த வாரம் ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை கலவரம் வெடித்து கொண்டிருக்கின்றது. டெவீல் அணியில் இருப்பவர்கள் ஏஞ்சல் அணியில் இருப்பவர்களை கெட்டவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் டாஸ்க்.

ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்:

இதற்காக டெவீல் அணியினர் ஏஞ்சல் அணியினரை கடுப்பேற்றி அவர்களுடைய குணத்தை மாற்ற பல்வேறு செயல்களை எல்லாம் செய்திருக்கிறார்கள். அதில் சிலர் கொஞ்சம் எல்லையை மீறி முட்டையை வாயில் ஊத்துவது, தலையில் உடைப்பது, முகத்தில் திணிப்பது, குப்பையை கொட்டுவது என்று மட்டமான வேலை எல்லாம் செய்திருக்கிறார்கள். இது பார்ப்போரை முகம் சுழிக்க வைத்து இருக்கிறது. இந்நிலையில் இந்த டாஸ்க் குறித்து பிக் பாஸ்ஸின் முன்னாள் போட்டியாளரும், ராப் பாடகருமான ஏடிகே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஏடிகே வீடியோ :

அதில் அவர், ஏஞ்சல் - டெவீல் டாஸ்க் என்பதை எல்லோருமே தப்பாக விளையாடுகிறார்கள். நானும் தப்பாக தான் விளையாடியிருந்தேன். இந்த டாஸ்க்கின் நோக்கமே, ஏஞ்சலோட மிருக குணத்தை வெளியில் கொண்டு வருவது கிடையாது. போட்டியாளர்களுடைய மிருக குணங்களை வெளியில் கொண்டு வருவது தான். நமக்குள் எந்த அளவிற்கு மிருக குணம் இருக்கிறது என்பதை வெளியில் கொண்டு வருவது என்று அர்த்தம்.
ஏஞ்சலாக இருப்பவர்கள் கோபப்படக்கூடாது என்றெல்லாம் கிடையாது. கோபம், அழுகை ஒருவருடைய உணர்வு.

View this post on Instagram

A post shared by ADK Rapper (@adkofficial)

டாஸ்க் குறித்து சொன்ன அட்வைஸ்:

அழுது கோபப்பட்டாலே ஏஞ்சல் தோற்று விட்டார் என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. ஏஞ்சல் அழுதால் டெவீல் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதோடு டாஸ்கில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். இதில் நான் யாரையுமே குறிப்பிட்டு குறை கூறவில்லை. ரொம்ப மட்டமாக நடத்தினால் எல்லோருக்குமே கோபம் தான் வரும். இப்படி மட்டமாக நடத்துவது, முட்டையை வாயில் ஊற்றுவது, கீழே இருக்கும் குப்பைத்தொட்டியை எடுத்து கொட்டுவது, பொருட்களை உடைப்பது போன்ற செயல்களை எல்லாம் தவிர்க்கலாம் என்று பேசியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full