இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரசவாதி. இவர் இதற்கு முன்பு மகாமுனி, மௌனகுரு போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசவாதி படத்தில் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ சித்தா கொடைக்கானலில் மருத்துவராக இருக்கிறார். ஹீரோயின் சூர்யா கொடைக்கானலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக இருக்கிறார். இருவருடைய கடந்த காலமும் பல பிரச்சினைகளைக் கடந்திருக்கிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் நிறைய காயங்கள் ஆறாத வடுவாக இருக்கிறது. அதில் கடந்த காலத்தால் சித்தாவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவரால் சரியாக நடக்கவே முடியவில்லை.

Advertisement

இதற்கான காரணத்தையும் சொல்கிறார்கள். பின் சித்தா- சூர்யாவுக்கு இடையே காதல் ஏற்படுகிறது. நன்றாக இருவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது போலீஸ் அதிகாரி ஒருவரால் இருவருக்குமே பிரச்சினை ஏற்படுகிறது. சித்தாவை பழிவாங்க போலீஸ் அதிகாரி சுஜித் நினைக்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? சித்தாவுடைய கடந்த காலத்தில் என்ன தான் நடந்தது? அதை இருவரும் எதிர்கொண்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் சித்தா கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ், சூர்யா கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்கள். இருவரை வைத்து தான் படமே சென்று கொண்டிருக்கின்றது. படத்தில் தனித்தனியாக ஹீரோ, ஹீரோயினிக்கு ஒரு பிளாஷ்பேக் காண்பிக்கிறார்கள். அது ஒன்னும் பெரிதாக இல்லை. கதாநாயகி தன்னுடைய நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருக்கும். நேரம், பொறுமை இருந்தால் மட்டுமே இந்த படம் பார்க்க முடியும்.

Advertisement

அதோடு கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தாலும், அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மேலும், சில கதாபாத்திரம் எளிதாக ரசிகர்கள் மத்தியில் கனெக்ட் ஆகவில்லை. இந்தப் படத்தைப் பார்க்க நிறைய பொறுமை வேண்டும் என்றே சொல்லலாம். கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால், படம் ரொம்ப ரொம்ப சுமாராக தான் இருக்கிறது.

Advertisement

நிறை:

அர்ஜுன் தாஸ் நடிப்பு நன்றாக இருக்கிறது

கதைக்களம் ஓகே

ஒளிப்பதிவு ஓகே

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிளஸ் இல்லை

குறை:

படம் பார்க்க ரொம்பவே பொறுமை தேவை

இயக்குனர் கதை களத்தை கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

பாடல்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

தன்யா கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் ரசவாதி – ஏமாற்றம்

Advertisement