ரகசியமாக நடந்த விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்? என்கேஜ்மென்ட் மோதிரம் பற்றி ராஷ்மிகா சொன்னது
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தமிழில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த தம்மா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்கிறார்.
ராஷ்மிகா குறித்த தகவல்:
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் காதலிக்கிறார், டேட்டிங் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப இருவருமே பல இடங்களில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு சில மேடைகளில் கூட விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாக மறைமுகமாக ராஷ்மிகா உறுதி செய்திருந்தார்.
ராஷ்மிகா காதல் கிசுகிசு:
சமீபத்தில் கூட தீபாவளி பண்டிகையை தன்னுடைய காதலர் வீட்டில் தான் ராஷ்மிகா கொண்டாடி மகிழ்திருந்தார். இதை அடுத்து கடந்த மாதம் தான் ராஷ்மிகா-விஜய் தேவர் கொண்டா உடைய நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். அதோடு ராஷ்மிகா கையில் இருக்கும் மோதிரத்தை வைத்து பலருமே இது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இருந்தாலுமே ராஷ்மிகா வாயை திறக்காமல் இருக்கிறார்.
ராஷ்மிகா சொன்ன பதில்:
இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கில் பிரபல நடிகர் ஜெகபதிபாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனாகலந்து கொண்டிருந்தார். அப்போது ஜெகபதிபாபு, அவருடைய கையில் இருக்கும் மோதிரத்தை பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு ராஷ்மிகா வெட்கப்பட்டு, ரொம்ப முக்கியமான ரிங் என்று சொல்லி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.