அந்த 10 செகண்ட் தான் அவங்களுக்கு தெரியும். ஆனால் - அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி

By subhashini · 5/4/2024

அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா - ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் அனிமல். இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா பயங்கர கிளாமராக நடித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

அனிமல் படம்:

மேலும், இந்த படம் வெளியாகி 900 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் இந்த படம் பெண்களுக்கு எதிரானது, இந்த படம் ஆண் சிந்தனை இருப்பதாக விமர்சித்திருக்கின்றார்கள். இந்த படம் குறித்து பிரபலங்கள் பலருமே விமர்சித்து இருந்தார்கள். இந்த நிலையில் அனிமல் படத்தில் ஒரு காட்சியில் ராஷ்மிகா மந்தனா பேசி இருக்கும் ஒரு சீன் தான் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா பேட்டியில், பெண்களை உருவ கேலி செய்பவர்களை எனக்கு பிடிக்காது.

View this post on Instagram

A post shared by Bollywood Video Page (@bollywoodvideopage)

ராஷ்மிகா மந்தனா பேட்டி:

அவர்கள் என்னுடைய படத்தை, நான் வசனம் பேசும்பொழுது, என்னுடைய முகத்தைப் பற்றி எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். என்னுடைய நடிப்பு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது. ஒரு சீன் மட்டும் ஒன்பது நிமிடம் கொண்டது. அந்த சீனை எடுக்கும்போது செட்டில் இருந்தவர்கள் எல்லோருமே கைத்தட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்ததாக சொன்னார்கள். ஆனால், ட்ரெய்லர் வெளியான போது அதே காட்சியை நான் பேசிய ஒரு வசனம் கிண்டல் கேலிக்குள்ளானது.

விமர்சனம் குறித்து சொன்னது:

அதை பார்க்கும்போது ஒரு காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என்று தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும்தான் தெரிகிறது என்று கூறியிருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் ஒரே பிரபலமடைந்தவர் ராஷ்மிகா.

https://www.youtube.com/watch?app=desktop&v=bcqo5zCdvs4

ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார். தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படம், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படம், தனுஷின் 51வது படம் என பல படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full