வாரிசு ஷூட்டிங்கில் ராஷ்மிகா செய்த விஷயம் - கையெடுத்து கும்பிட்டுள்ள விஜய். இன்னும் என்ன பாடு படுறாரோ ?

By Rajkumar · 30/9/2022

வாரிசு பட சூட்டிங்கில் ராஸ்மிகா செய்த செயலை பார்த்து கையெடுத்து விஜய் கும்பிட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது.

படம் குறித்த தகவல்:

தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் மட்டும் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றனர். சமீபத்தில் கூட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர்கள் ரசிகர்களை பார்த்து கைய அசைத்து விட்டு சென்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

ராஸ்மிகா மந்தனா அளித்த பேட்டி:

இந்த நிலையில் வாரிசு படத்தின் கதாநாயகி ராஸ்மிகா மந்தனா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்து கூறியிருந்தது, விஜய் தான் என்னுடைய கிரஷ். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எப்போது பார்த்தாலும் சுற்றி போடுவது போன்று நான் செய்வேன். இதனால் விஜய் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என்று சொல்வார் என்று கூறியிருக்கிறார். இப்படி ராஸ்மிகா மந்தனா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா.

ராஸ்மிகா மந்தனா திரைப்பயணம்:

‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமாகி இருந்தார். அப்படியே இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full